பெண்ணை துண்டு துண்டாக வெட்டி கொலை; 2 பேர் கைது!

 
Published : Oct 22, 2017, 05:14 PM ISTUpdated : Sep 19, 2018, 01:20 AM IST
 பெண்ணை துண்டு துண்டாக வெட்டி கொலை; 2 பேர் கைது!

சுருக்கம்

Woman killed cut into pieces

மகாராஷ்டிராவில் பெண்ணை துண்டு துண்டாக வெட்டி சாக்கு மூட்டையில் வீசிய இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

மகாராஷ்ட்டிர மாநிலம், தானே மாவட்டத்தில் உள்ள பிவாண்டி அருகே கால்வாயில் சாக்கு மூட்டையில் பெண்ணின் உடல் பாகங்கள் கிடப்பதாக சாந்தி நகர் போலீசாருக்கு நேற்று தகவல் வந்தது. 

அந்த மூட்டையை கைப்பற்றி போலீசார் விசாரித்து வந்தபோது அருகாமையில் உள்ள மற்றொரு கால்வாயில் மேலும் ஒரு சாக்கு மூட்டையில் கொல்லப்பட்ட பெண் உடலின் இதர பாகங்கள் கிடைத்தன.

கொலையான பெண் பழங்குடியின மக்கள் அதிகமாக ஜவஹர் தாலுகாவை சேர்ந்த கூலி தொழிலாளி வம்ஷி வாமன் கோரட் என்ற அடையாளத்தை போலீசார் கண்டுபிடித்தனர். 

பிவாண்டி நகரின் அருகேயுள்ள டேம்கர் பகுதியில் வசித்துவந்த சுமார் 40 வயது மதிக்கத்தக்க அந்தப் பெண்ணை கொன்றது யார்? என்று தேடிவந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த ஜியாலால் அப்துல் ரஜாக் கான்(38), சுரேஷ் ராஜ்குரே(40) ஆகியோரை கைது செய்து விசாரித்தனர்.

கடந்த 20-ம் தேதி இரவு வம்ஷி வாமன் கோரட்டுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தால் ஆத்திரமடைந்த அவர்கள் இருவரும் அந்தப் பெண்ணை கொன்று பிரேதத்தை துண்டங்களாக வெட்டி சாக்கு மூட்டைகளாக கால்வாயில் வீசியதாக கைதான இருவரும் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
 

PREV
click me!

Recommended Stories

H-1B visa: இந்திய குடும்பங்களை பிரிக்கும் டிரம்ப் உத்தரவு.! ஆளுக்கொரு நாட்டில் வசிக்கும் தம்பதிகள்.!
Shivraj Patil: முன்னாள் உள்துறை அமைச்சரும், காங்கிரஸ் தலைவருமான சிவ்ராஜ் பாட்டீல் காலமானார்