
கணவரை துப்பாக்கி முனையில் வைத்துவிட்டு இளம் பெண்ணை 4 பேர் கொண்ட கும்பல் மாறி மாறி கற்பழித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியில் குடும்ப நிகழ்ச்சியில் கலந்து கொண்டுவிட்டு ஒரு பெண் தனது மைத்துனரின் காரில், கணவர் மற்றும் மைத்துனருடன் 22 வயதுள்ளார் அந்த பெண். செக்டார் 56 பகுதியிலுள்ள, பிசினஸ் பார்க் டவர் என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தபோது, அவரது கணவர் காரை நிறுத்தி கீழே இறங்கியுள்ளார்.
பாத்ரூம் செல்வதற்காக அந்த இளம்பெண்ணின் கணவர் கீழே இறங்கி சென்றுள்ளார். அப்போது அப்போது அந்த வழியே வந்த 2 கார்களில் நான்கு பேர் ஏன் இங்கே காரை நிறுத்தி உள்ளீர்கள் என கேட்டுள்ளனர். இதற்கு அந்த பெண்ணின் மைத்துனரும், கணவரும் பதில் சொல்லிக்கொண்டிருந்தபோதே, நால்வரின் பார்வையும், காருக்குள் இருந்த அந்த இளம்பெண் பார்த்துக்கொண்டே பேசியுள்ளனர்.
தங்களுக்குள் ஏதோ பேசிக்கொண்ட அந்த நான்கு பேரும் திடீரென துப்பாக்கியை நீட்டிவிட்டு, காருக்குள் இருந்த அந்த பெண்ணை வெளியே இழுத்து கொண்டுவந்தனர். மூன்று பேர் துப்பாக்கியை வைத்து கணவரையும், மைத்துனரையும் மிரட்டிள்ளனர். மற்றொருவர் அந்த பெண்ணை அவர்கள் கண் முன்னாடியே பலாத்காரம் செய்துள்ளார். இதனையடுத்து துப்பாக்கியை வைத்து மிரட்டிக்கொண்டிருந்த மற்ற மூன்று பெரும் மாறி, மாறி அந்த பெண்ணை பலாத்காரம் செய்துவிட்டு நால்வரும் தப்பிச் சென்றுள்ளனர்.
தப்பிச் செல்லும் போது இந்த விஷயத்தை வெளியே சொன்னால் உங்களை குடும்பத்தோடு கொன்றுவிடுவோம் என மிரட்டிவிட்டு சென்றனர். ஆனால் அப்பெண்ணின் கணவர், பலாத்கார கொடூரர்கள் தப்பிச் சென்ற கார் எண்ணை பார்த்து கொண்டார். அவர்கள் சென்ற பின் காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்துள்ளார்.
குர்கான் போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து கார் பதிவு எண்ணை வைத்து, சோஹ்னா பகுதியிலுள்ள ஜோகல்கா கிராமத்தை சேர்ந்த நான்கு காமக் கொடூரர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.