
துபாயில் இருந்து 12 தங்கக் கட்டிகளை கடத்தி வந்த பெண்ணை, டெல்லி விமான நிலையத்தில், சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
துபாயில் இருந்து டெல்லி வரும் விமானம் மூலம் தங்கம் கடத்தப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து, டெல்லி சர்வதேச விமான நிலையத்தில், பயணிகள் அனைவரையும் அதிகாரிகள் சோதனைக்கு உட்படுத்திய பின், வெளியே செல்ல அனுமதித்தனர். அப்போது பெண் ஒருவரின் உடைமைகளை சோதனை செய்தபோது, 12 தங்கக் கட்டிகள் மற்றும் 110 தங்க அணிகலன்களை கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் அந்த பெண்ணை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.