இந்தியாவில் புதிய உச்சத்தை தொட்ட கொரோனா..! ஒரே நாளில் இத்தனை பேர்! வெளியான அதிர்ச்சி தகவல்!

By manimegalai aFirst Published May 1, 2020, 4:58 PM IST
Highlights

இந்தியாவில் ஒரே நாளில், கொரோனா வைரஸால் அதிக நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதால், கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
 

இந்தியாவில் ஒரே நாளில், கொரோனா வைரஸால் அதிக நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதால், கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

உலக அளவில் பெரும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி  வரும் கொடிய கொரோனா வைரஸ் நோய், இந்தியாவிலும் அசுர வேகம் எடுத்து இருக்கிறது. நாளுக்கு நாள் கொரோனா வைரஸால் பாதிக்க படுபவர்கள் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்து வருவதால், மே 3 ஆம் தேதி, ஊரடங்கு உத்தரவு தளர்த்த படுமா என்கிற சந்தேகமும் எழுந்துள்ளது.

கொரோனா வைரஸின் பாதிப்பை கட்டுப்படுத்த மக்கள் சமூக விலகலை கடைபிடிக்க வலியுறுத்தி நாடு முழுவதும் அமலில் இருந்த 21 நாட்கள் ஊரடங்கு, இரண்டாம் கட்டமாக  மேலும் 19 நாட்களுக்கு நீட்டிக்கப்படுவதாக பிரதமர் மோடி அறிவித்தார். 

மேலும் செய்திகள்: தமிழ் பிக்பாஸ் சீசன் 4 தொகுப்பாளர் மாற்றமா? போட்டியாளர்கள் பற்றி வெளியே கசிந்த தகவல்!
 

அதன்படி வருகிற மே3ம் தேதி வரை இரண்டாம் கட்ட தேசிய ஊரடங்கு முடிவடைய உள்ளது. ஊரடங்கு கட்டுப்பாடுகள் கடுமையாக கடைபிடிக்கப்பட்டு வந்த போதும் தினமும்  இந்திய அளவில் 1300 நபர்களுக்கு மிகாமல் கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டு வருகிறது.  

அந்த வகையில், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக, 1993  பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதால் கொரோனா தாக்கம் புதிய உச்சத்தை தொட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை  67  பேர் பலியாகி உள்ளதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்: அஜித்தை கட்டிப்பிடித்திருக்கும் விஜய்..! சோசியல் மீடியாவை தெறிக்க விடும் தல - தளபதி போஸ்டர்ஸ்!
 

மேலும் 564 பேர் பூரண பேர் பூரண நலம் பெற்று வீடு திரும்பியுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒருபக்கம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு பலர் குணமடைந்து, வீடு திரும்பி வரும் நிலையிலும்... ஒவ்வொரு நாளும் அதை விட அதிகமாக மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவது, இந்தியாவிற்கே மிக பெரிய சவாலாய் அமைந்துள்ளது.

click me!