
வீட்டில் பெற்றோர்கள் டீயை நமக்கு ஆத்தி வைத்து விட்டு செல்வார்கள், ஆசையோடு அதை குடிக்கலாம் என்று எண்ணி சென்று எட்டிப்பார்த்தால், அதில் ஒரு பல்லி உல்லாசமாக நீதிக்கொண்டிருக்கும், சரி அவ்வளவு தான் நமது விதி என்று நினைத்துக்கொண்டு, டீயை கீழே ஊதிவிட்டு நாம் அடுத்த வேலையை பார்க்க சென்றுவிடுவோம்.
இதுதான் சீனாவின் சிக்கலான பிரசார நெட்வொர்க்: வெளுத்து வாங்கிய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர்!
ஆனால் இப்பொது இணையத்தில் வைரலாகி வரும் ஒரு காணொளியை பார்த்த பிறகு தான் தெரியவருகின்றது, நம்ம டீயில் நீச்சலடித்து கொண்டிருந்த அந்த பல்லி, தவிறிப்போய் அதில் விழவில்லை, மாறாக அந்த டீயை திருட்டுத்தனமாக குடிக்க வந்து அதில் தொபக்கென்று கவிழ்ந்து உள்ளே விழுந்துள்ளது என்று (இதனால நாள் இது தெரியாம போச்சே).
தற்போது இன்ஸ்டாகிராம் மற்றும் பிற சமூக வலைத்தளங்களில் ஒரு பல்லியின் வீடியோ தான் செம வைரல். வெளியான அந்த வீடியோவில் மேசையில் வைக்கப்பட்டுள்ளத்து ஒரு டீ கப். ஆனால் அந்த கப்பில் உள்ள டீயை, யாருக்கும் தெரியாமல், அதுவும் நின்ற மேனிக்கு ரசித்து, ருசித்து தனது சின்னச்சிறு வாயால் குடித்துக்கொண்டிருக்கிறது ஒரு பல்லி. ரொம்ப தெளிவான பல்லி போல..