கர்நாடகா, கேரளாவில் அதிகரித்த வெப்பநிலை; குறைந்த தென்மேற்கு பருவமழை; தமிழகத்துக்கும் பாதிப்பு!!

By Dhanalakshmi G  |  First Published Aug 28, 2023, 12:44 PM IST

நடப்பாண்டில் தென்மேற்கு பருவமழை பற்றாக்குறை பெரிய அளவில் தென் மாநிலங்களில் ஏற்பட்டுள்ளது. இதற்குக் காரணம் வெப்பநிலையில் ஏற்பட்டு இருக்கும் மாற்றம் என்று கூறப்படுகிறது.


தமிழ்நாட்டிற்கு பொதுவாக விவசாயம் மற்றும் குடிநீருக்கு கேரளா, கர்நாடகா, ஆந்திராவை நம்பி இருக்கிறோம். தமிழ்நாட்டிற்கு என்று பெரிய ஆறுகள் இல்லை. தாமிரபரணி மட்டும் தமிழ்நாட்டில் உதித்து மாநிலத்திற்குள்ளேயே முடிகிறது. தாமிரபரணி தண்ணீர் திருநெல்வேலி மற்றும் சுற்றுப் பகுதிகளில் இருக்கும் கிராமங்களின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்து வருகிறது. இந்த நிலையில், தமிழ்நாடு நாடி இருக்கும் கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் நடப்பு சீசனில் குறைவான மழையே பதிவாகி இருக்கிறது. கேரளாவில் 47% பருவமழை பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. 

பருவமழை பற்றாக்குறை மற்றும் தற்போது நிலவும் வடமேற்கு காற்று காரணமாக கர்நாடகாவில் சராசரி அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் உயர்ந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கர்நாடகா எப்போதும் குளிர்ச்சியாக காணப்படும். குறிப்பாக பருவமழை காலங்களில். அவற்றில் முற்றிலும் இந்த முறை மாறுதல் ஏற்பட்டுள்ளது. 

Latest Videos

undefined

கர்நாடகாவில் ஜூன் மாதம் முதல் 666 மி.மீ., பருவமழை பெய்யும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இதுவரை 490 மி.மீ., மழை மட்டுமே பெய்துள்ளது. இந்த பற்றாக்குறை ஆகஸ்ட் மாத மழையில் 23% பற்றாக்குறைக்கு வழிவகுத்தது. ஜூலை கடைசி வாரத்தில் கணிசமான மழை பெய்தாலும், அடுத்தடுத்த மழைப்பொழிவு எதிர்பார்த்ததை விட குறைந்துள்ளது.

காதலியின் நடத்தையில் சந்தேகம்.. குக்கரால் அடித்தே கொன்ற கொடூர காதலன் - பெங்களூருவில் பரபரப்பு!

எனவே, வளிமண்டலத்தில் ஈரப்பதம் குறைந்து, நிலவும் காற்று வடமேற்கு நோக்கி நகர்ந்துள்ளது. இவற்றின் காரணமாக மாநிலம் முழுவதும் வெப்பநிலை அதிகரித்துள்ளது. மலைப்பகுதியான மடிகேரியில் கடந்த மூன்று மாதங்களில் மழைப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. மடிகேரியில் வழக்கமாக 22 டிகிரி செல்சியஸுக்கு பதிலாக 29 டிகிரி செல்சியசாக வெப்பநிலை உயர்ந்துள்ளது.

மற்ற பகுதிகளும் இயல்பை விட அதிக வெப்பநிலையை சந்தித்துள்ளன. மாண்டியாவின் வெப்பநிலை நிலையான 29.4-ஐ விட 4.6 டிகிரி செல்சியசாக உயர்ந்துள்ளது. மேலும் ஷிர்சியில் 4.1 டிகிரியாக  (வழக்கமான 29.7) உயர்ந்துள்ளது.

பெங்களூருவில் 3.8 டிகிரி (வழக்கமான 28), சிந்தாமணியில் 3.2 டிகிரி (வழக்கமான 29.1), கலபுர்கி மற்றும் மைசூரில் முறையே 2.6 டிகிரி (முறையே 31.9 மற்றும் 28.9), பிதாரில் 2.2 டிகிரி (வழக்கமான 29.4 டிகிரி) வெப்பம் அதிகரித்துள்ளது. 28.3). விஜயபுராவின் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி அதிகரித்து, 30.8 டிகிரி செல்சியஸை எட்டியுள்ளது.

மேலும், மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் குறைந்தபட்ச வெப்பநிலை சராசரி அளவை விட அதிகமாக உள்ளது. பெங்களூரு, பிதார் மற்றும் மண்டியாவில் இயல்பை விட 2 டிகிரி செல்சியஸ் அதிகரித்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தலைகீழாக தொங்கவிடப்பட்டு மிருகத்தனமாக தாக்கப்பட்ட தலித் இளைஞர்கள்.. மஹாராஷ்டிராவில் பயங்கரம் - என்ன நடந்தது?

கடந்த 15 நாட்களாக போதிய மழை இல்லாததால் இந்த வெப்பநிலையில் ஏற்ற இறக்கங்கள் தொடர்கின்றன. வானிலை நிபுணர் பிரசாத், வரவிருக்கும் மழையின் சாத்தியக்கூறுகளை சுட்டிக்காட்டியுள்ளார். அது செயல்படும் பட்சத்தில், வெப்பநிலையை குறைக்கலாம்.

வெப்பநிலை உயர்வுக்கு முக்கிய காரணங்கள்: 

1. பருவமழை காலத்தில் 490 மி.மீ மழை மட்டுமே பெய்துள்ளது. எதிர்பார்த்த 666 மி.மீ.க்கு குறைவாகவே பெய்துள்ளது.

2. பருவ மழை பெய்தாலும், ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் 23% பற்றாக்குறை உள்ளது.

3. மழையின் பற்றாக்குறை வளிமண்டல ஈரப்பதத்தை குறைத்தது.

4. தென்மேற்கு திசையில் இருந்து நிலவும் காற்று மாறி, வெப்பநிலை அதிகரிப்புக்கு காரணமானது. 

click me!