நான் ஏன் சன்யாசி ஆனேன்: உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தகவல்!

By Manikanda Prabu  |  First Published Jan 18, 2024, 12:05 PM IST

உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தான் சன்யாசி ஆனதற்கான காரணம் குறித்து விளக்கம் அளித்துள்ளார்


ராமர் கோயில் இயக்கத்தால் தாம் சன்யாசி ஆனதாக உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். தொலைக்காட்சி சேனல் ஒன்று ஏற்பாடு செய்திருந்த மாநாட்டில் பேசிய அவர், ஜனவரி 22 ஆம் தேதி நடைபெறவுள்ள ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை அரசியல் ரீதியாக ஆதாயப்படுத்த பாஜக முயற்சிக்கிறது என்ற எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டை நிராகரித்தார்.

“ஆரம்பத்தில் இருந்தே ராமர் கோயில் இயக்கத்தில் எனக்கு தொடர்பு உண்டு. உண்மையில் ராமர் கோயில் இயக்கத்தால் தான் நான் ‘சன்யாசி’ ஆனேன். இருப்பினும், ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவிற்கு நான் எந்த பெருமையையும் எடுத்துக்கொள்ள விரும்பவில்லை. ராமரின் அடியார்களாக அயோத்திக்கு செல்கிறோம்.” என உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

Tap to resize

Latest Videos

ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவுக்கு காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாடி கட்சித் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாகவும், ஆனால் அவர்கள் அதில் பங்கேற்க மறுத்துவிட்டதாகவும் அவர் கூறினார். ராமர் கோயிலுக்கு யாரும் வருவதை தடுக்கவில்லை. ராமரின் அடியார்களாக வருபவர்கள் வரவேற்கப்படுகிறார்கள் எனவும் யோகி கூறினார்.

சமாஜ்வாதி மற்றும் பிற கட்சியினரின் குணாதிசயங்கள் மக்களுக்கு தெரியும் என எதிர்க்கட்சிகளை அவர் கிண்டல் செய்தார். “நான் முதலமைச்சராக இல்லாவிட்டாலும், ராமர் கோயில் இயக்கத்தின் ஒரு பகுதியாக இருந்திருப்பேன். ராமர் வழிபாடு என்று வரும்போது, பின் இருக்கையில் அமர்ந்திருந்தாலும் பெருமை கொள்வேன்.” என யோகி ஆதித்யநாத் கூறினார்.

இந்தியாவில் 25 சதவீத பதின்ம வயது சிறுவர்களுக்கு தாய் மொழியில் படிக்க தெரியவில்லை: ஆய்வில் அதிர்ச்சி!

‘இது பெருமை சேர்த்துக் கொள்ளும் தருணம் அல்ல; ராமர் தான் தெய்வீக தந்தை’ என அவர் கூறினார். தனது குருவின் பங்களிப்பை நினைவுகூர்ந்த முதல்வர் யோகி ஆதித்யநாத், ராமர் கோயில் இயக்கத்தின் முன்னணி வீரர்களில் ஒருவராக இருந்த தனது மதிப்பிற்குரிய குருதேவ் மஹந்த் அவைத்யநாத்ஜியைப் பெற்றது தான் செய்த அதிர்ஷ்டம் என்றார்.

ராமர் கோயில் இயக்கத்தில் கோரக்ஷ்நாத் பீடத்தின் தொடர்பு மற்றும் பங்கு மற்றும் கோயில் இயக்கத்தில் மஹந்த் அவியாத்யநாத்தின் பங்கு பற்றி அவர் பேசினார். “3 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தங்கள் இன்னுயிரை தியாகம் செய்தனர். 76 க்கும் மேற்பட்ட மோதல்கள் கோயில் திருப்பணிக்காக நடந்தன. கோரக்ஷ்நாத் பீடத்திற்கு மக்கள் அடிக்கடி செல்வார்கள். அந்த போராட்டத்தின் பலனாக இன்று கோயில் தலை நிமிர்ந்து நிற்கிறது.” என்று யோகி ஆதித்யநாத் தெரிவித்தார்.

click me!