பாக். தேசத்தந்தையுடன் இருக்கும் பெண்கள் ஹிஜாப் அணியாதது ஏன்? நெட்டிசன்கள் கேள்வி… வைரலாகும் புகைப்படம்!!

Published : Feb 15, 2022, 09:38 PM IST
பாக். தேசத்தந்தையுடன் இருக்கும் பெண்கள் ஹிஜாப் அணியாதது ஏன்? நெட்டிசன்கள் கேள்வி… வைரலாகும் புகைப்படம்!!

சுருக்கம்

ஹிஜாப் விவகாரம் பூதாகரமாகியுள்ள நிலையில் 2014 ஆம் ஆண்டு டான் செய்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில் பாக். தேசத்தந்தை ஜின்னாவுடன் இருக்கும் பெண்கள் ஹிஜாப் அணியாததை சுட்டிக்காட்டி நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். 

ஹிஜாப் விவகாரம் பூதாகரமாகியுள்ள நிலையில் 2014 ஆம் ஆண்டு டான் செய்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில் பாக். தேசத்தந்தை ஜின்னாவுடன் இருக்கும் பெண்கள் ஹிஜாப் அணியாததை சுட்டிக்காட்டி நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். கர்நாடகாவில் இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த பள்ளி மாணவிகள் ஹிஜாப் ஆடை அணிந்துவர தடை விதிக்கப்பட்டது. பள்ளி சீருடை அணிந்துவர வேண்டும் என்று பள்ளி நிர்வாகம் கூறுகிறது. இதையடுத்து, இஸ்லாமிய மாணவிகள் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மாணவர்கள் காவித்துண்டு அணிந்து வந்தனர். இது கர்நாடகாவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. மாணவ-மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பெங்களூரில் பள்ளிம் கல்லூரிகளை சுற்றி 144 தடை உத்தரவு வருகிற 22 ஆம் தேதி வரை பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் குறிப்பிட்ட சில பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறையும் அளிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து பேசிய கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான், ஹிஜாப் இஸ்லாம் மதத்தின் ஓர் அங்கமல்ல. ஹிஜாப் என்ற வார்த்தை 7 முறை மட்டுமே குரானில் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதுவும் உடை ரீதியிலான கோணத்தில் கூறப்படவில்லை. ஹிஜாப் என்பது பெண்களின் உடை என குரானில் குறிப்பிடப்படவில்லை. இஸ்லாமில் ஹிஜாப் அத்தியாவசியமானது அல்ல என்று தெரிவித்துள்ளார். ஹிஜாப் விவகாரம் பூதாகரமாய் வெடித்த நிலையில் தற்போது அதுப்பற்றிய ஆளுநரின் கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது வைரலாகும் புகைப்படம் ஆளுநர் கருத்தில் உண்மை இருக்குமோ என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளது.

 

2014 ஆம் ஆண்டு டான் செய்தி நிறுவனம் ஒரு புகைப்படத்துடன் கூடிய செய்தியை வெளியிடுள்ளது. அதில் பாகிஸ்தான் தேசத்தந்தை முகமது அலி ஜின்னாவுடன் அகில இந்திய முஸ்லீம் மாணவர் கூட்டமைப்பு மகளிர் பிரிவு உறுப்பினர்கள் புகைப்படம் எடுத்துள்ளனர். 8 வருடங்களுக்கு பிறகு இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. ஹிஜாப் விவகாரம் பூதாகரம் ஆகியுள்ள நிலையில் கேரள ஆளுநர், இஸ்லாமியத்தில் ஹிஜாப் அவசியமானதல்ல என்றார். அதனை உண்மையாக்குவது போல பாகிஸ்தான் தேசத்தந்தை ஜின்னாவுடன் இருக்கும் பெண்கள் ஹிஜாப் அணியாமல் புகைப்படம் எடுத்துள்ளனர். இதை அடுத்து ஜின்னாவுடன் இருக்கும் பெண்கள் ஹிஜான் அணியாதது ஏன் என அந்த புகைப்படத்தை மேற்கோள் காட்டி நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். 

PREV
click me!

Recommended Stories

சபரிமலை சன்னிதானத்திற்கு அருகில் திடீர் தீ விபத்து!
ஹமாஸ் நமக்கு பொது எதிரி.. உடனே இதைச் செய்யுங்க.. இந்தியாவுக்கு இஸ்ரேல் வார்னிங்!