இரவு நேர ஊரடங்கு வாபஸ்... மாஸ்க் போடலைன்னா அபராதம்... அறிவித்தது ஆந்திரா அரசு!!

By Narendran S  |  First Published Feb 15, 2022, 7:49 PM IST

ஆந்திராவில் இரவு நேர ஊரடங்கு வாபஸ் பெறப்பட்டுள்ளது நிலையில்,  பொது இடங்களில் முகக்கவசம் அணியாவிட்டால் அபராதம் வசூலிக்கப்படும் என அம்மாநில அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. 


ஆந்திராவில் இரவு நேர ஊரடங்கு வாபஸ் பெறப்பட்டுள்ளது நிலையில்,  பொது இடங்களில் முகக்கவசம் அணியாவிட்டால் அபராதம் வசூலிக்கப்படும் என அம்மாநில அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா 3 ஆவது அலை மற்றும் ஒமைக்ரான் பரவல் கடந்த டிசம்பர் மாதத்திலிருந்து அதிகரிக்கத் தொடங்கியது. இதனால் நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில்  ஊரடங்கு, பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடல் உள்ளிட்ட பல்வேறு கட்டுபாடுகள் விதிக்கப்பட்டிருந்தன.

Latest Videos

அந்த வகையில் ஆந்திராவில் கடந்த மாதம் கொரோனா பரவல் அதிகரித்து வந்ததை அடுத்து, அதனைக்  கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு  கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்படி ஜனவரி 18 ஆம் தேதி முதல் இரவு நேர ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. அதன் பயனாக தற்போது  கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. இதனைத் தொடர்ந்து இரவு நேர ஊரடங்கு வாபஸ் பெறப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

எனினும் பொது இடங்களில் முக கவசம் அணிவது கட்டாயம் என்றும், விதிகளை மீறுவோரிடம் 100 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி, நிறுவனங்கள் மற்றும் கடைகளில் பணியாற்றும் ஊழியர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும், விதிகளை மீறினால் 10,000 ரூபாய் முதல் 25 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கலாம் என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.  இந்த உத்தரவு வரும் 28 ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது. 

click me!