கேபினட் செயலாளராக பதவியேற்கும் வரை சோமநாதன் அமைச்சரவை செயலகத்தில் சிறப்புப் பணி அதிகாரியாக பணியாற்றுவார் என்றும் நியமனக் குழுவின் அதிகாரப்பூர்வ அறிக்கை தெரிவிக்கிறது.
மத்திய அமைச்சரவையின் புதிய செயலாளராக மூத்த ஐஏஎஸ் அதிகாரி டி.வி.சோமநாதனை மத்திய அரசு சனிக்கிழமை நியமித்துள்ளது. தற்போது நிதித்துறை செயலாளராக பணியாற்றி வருகிறார்.
மத்திய அமைச்சரவை செயலாளராக இருந்த ராஜீவ் கவுபாவுக்குப் பதிலாக சோமநாதன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். 1987ஆம் ஆண்டு பேட்ச் தமிழ்நாடு கேடர் ஐஏஎஸ் அதிகாரியான சோமநாதன் ஆகஸ்ட் 30ஆம் தேதி தொடங்கி இரண்டு ஆண்டுகளுக்குப் பதவியில் இருப்பார் என அமைச்சரவையின் நியமனக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.
undefined
கேபினட் செயலாளராக பதவியேற்கும் வரை சோமநாதன் அமைச்சரவை செயலகத்தில் சிறப்புப் பணி அதிகாரியாக பணியாற்றுவார் என்றும் நியமனக் குழுவின் அதிகாரப்பூர்வ அறிக்கை தெரிவிக்கிறது.
மத்திய அரசின் நிர்வாகத்தில் உயரிய பதவி கேபினட் செயலாளர் பதவியாகும். இந்தப் பணியில் அமர்த்தப்படும் மூத்த அரசு அதிகாரி நேரடியாக பிரதமரின் கீழ் செயல்படுவார். மத்திய அரசின் நிர்வாக செயல்பாடுகளில் முக்கியாமன பொறுப்பாளராக இருப்பார். பல்வேறு அமைச்சகங்கள் இடையே சுமூகமான பரிவர்த்தனையை நிர்வகிக்கும் பணியைச் செய்வார்.
சம்பளமே இல்லாமல் வேலை செய்யும் அம்பானி! செலவுகளை எப்படி நிர்வகிக்கிறார் தெரியுமா?
தற்போது இந்தப் பதவியில் இருக்கும் ராஜீவ் கௌபா 2019 முதல் ஐந்து ஆண்டுகளாக கேபினட் செயலாளராக பணியாற்றியுள்ளார். ஆகஸ்ட் 30ஆம் தேதியுடன் அவரது பதவிக்காலம் முடிவுக்கு வருகிறது.
டி. வி. சோமநாதன் யார்?
1987ஆம் ஆண்டு பேட்ச் ஐ.ஏ.எஸ். அதிகாரின டி.வி.சோமநாதன் தேசிய அளவில் 2வது ரேங்க் பெற்று சிவில் சர்வீஸ் பணியில் சேர்ந்தார். அவர் தனது பேட்சில் சிறந்த ஐ.ஏ.எஸ் ப்ரோபேஷனராக இருந்ததற்காக அவருக்கு தங்கப் பதக்கம் பெற்றுள்ளார்.
பிரதமர் அலுவலகத்தில் கூடுதல் செயலாளராகவும், இணைச் செயலாளராகவும், கார்ப்பரேட் விவகார அமைச்சகத்தில் இணைச் செயலாளராகவும் பணியாற்றியுள்ளார். உலக வங்கியில் இயக்குனராகவும் பணியாற்றிய அனுபவம் உள்ளவர்.
பட்ஜெட் துணை செயலாளர், இணை விஜிலென்ஸ் கமிஷனர், குடிநீர் விநியோக நிர்வாக இயக்குனர், முதலமைச்சரின் செயலாளர், கூடுதல் தலைமை செயலாளர் மற்றும் வணிக வரி ஆணையர் உள்ளிட்ட பதவிகளில் தமிழ்நாட்டிலும் பணியாற்றி இருக்கிறார்.
கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் முனைவர் பட்டமும், பொருளாதாரத்தில் எம்.ஏ பட்டமும் பெற்றவர் டி.வி. சோமநாதன். ஹார்வர்ட் பிசினஸ் ஸ்கூலிலும் படித்துள்ளார். பட்டய கணக்காளராகவும், நிறுவன செயலாளராகவும் பணிபுரிந்திருக்கிறார்.
பெண்களுக்கு மட்டும் இந்த சூப்பர் திட்டம்! வெறும் 1000 டெபாசிட் செய்தால் ரூ.2 லட்சம் கிடைக்கும்!