தந்தையர் தினத்தை முன்னிட்டு, ஐஏஎஸ் பயிற்சி அதிகாரியான உமா ஹாரதிக்கு அவரது தந்தையான எஸ்பி அந்தஸ்து அதிகாரி சல்யூட் அடித்த சம்பவம் வரவேற்பை பெற்றுள்ளது.
யுபிஎஸ்சி சிவில் சர்வீசஸ் தேர்வு (CSE) சந்தேகத்திற்கு இடமின்றி இந்தியாவின் கடினமான தேர்வுகளில் ஒன்றாகும். இந்த மதிப்புமிக்க தேர்வில் வெற்றி பெறுபவர்கள், ஐஏஎஸ், ஐபிஎஸ் மற்றும் ஐஎஃப்எஸ் ஆகி மற்ற பதவிகளில் சேருகிறார்கள். அவர்கள் நிறைய மரியாதை சம்பாதித்து தங்கள் குடும்பத்தை பெருமைப்படுத்துகிறார்கள்.
சனிக்கிழமையன்று, தெலுங்கானாவில் ஒரு பெண் ஐஏஎஸ் பயிற்சி அதிகாரி தனது போலீஸ் தந்தையை அதிகாரப்பூர்வ பயிற்சியின் போது சந்தித்த சம்பவம் நடைபெற்றுள்ளது.யுபிஎஸ்சி சிஎஸ்இ 2022 தேர்வில் அகில இந்திய ரேங்க் (ஏஐஆர்) 3-ல் வெற்றி பெற்ற அவரது பெயர் என் உமா ஹாரதி.
தந்தையர் தினத்தை முன்னிட்டு, காவல்துறை கண்காணிப்பாளர் (SP) நிலை அதிகாரியும், தெலுங்கானா மாநில காவல்துறை அகாடமியின் (TSPA) துணை இயக்குநருமான N வெங்கடேஸ்வரலு, IAS பயிற்சி அதிகாரியான அவரது மகள் N உமா ஹாரதி வணக்கம் செலுத்தினார்.
A Memorable Salute 🫡
N Venkateshwarulu, Deputy Director of Telangana Police Academy welcomed his daughter N Uma Harathi (Probationary IAS Officer) at the academy. pic.twitter.com/mPQ5Z77q5D
மாநில போலீஸ் அகாடமிக்கு அவர் சென்றது பயிற்சியின் ஒரு பகுதியாகும். வைரலான புகைப்படத்தில், ஐஏஎஸ் உமாவின் தந்தை தனது மகளுக்கு வணக்கம் செலுத்துவதும், பூங்கொத்து வழங்குவதும் காணப்பட்டது. அந்த நேரத்தில் எடுக்கப்பட்ட படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.