Kolkata Rape Murder Case | குற்றம்சாட்டப்பட்ட சஞ்சய் ராய்காக ஆஜராகும் கபிதா சர்க்கார்! யார் இவர்?

By Dinesh TG  |  First Published Aug 25, 2024, 2:50 PM IST

கொல்கத்தாவின் ஆர்ஜி கர் மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி சஞ்சய் ராய்க்கு மரண தண்டனை கோரிக்கை வலுவடைந்து வருகிறது. சஞ்சய் ராயின் வழக்கை எந்த வழக்கறிஞரும் வாதிட முன்வராத நிலையில், சியால்டா நீதிமன்றம் இந்தப் பொறுப்பை கபிதா சர்க்காரிடம் ஒப்படைத்துள்ளது. கபிதா சர்க்கார் யார், சஞ்சய் ராயை அவரால் காப்பாற்ற முடியுமா என்பதை அறிந்து கொள்வோம்.
 


கொல்கத்தாவின் ஆர்ஜி கர் மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்த கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக சஞ்சய் ராயை என்பை சிபிஐ கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. சஞ்சை ராய்க்கு மரண தண்டனை கோரிக்கை நாளுக்குநாள் வலுவடைந்து வருகிறது.

இந்நிலையில், சஞ்சய் ராயின் வழக்கை எந்த வழக்கறிஞரும் வாதிட முன்வராத நிலையில், சியால்டா நீதிமன்றம் இந்தப் பொறுப்பை கபிதா சர்க்காரிடம் ஒப்படைத்துள்ளது.

யார் இந்த கபிதா சர்க்கார்!

52 வயதான கபிதா சர்க்கார் ஒரு வழக்கறிஞர். அவர் கடந்த 25 ஆண்டுகளாக வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். கபிதா சர்க்கார் ஹூக்ளி மோக்சின் கல்லூரியில் சட்டப் படிப்பை முடித்தார். பின்னர் அவர் அலிபூர் நீதிமன்றத்தில் தனது பணியை தொடங்கி சிறிய வழக்குகளில் வாதாடினார். நீண்ட வருட அனுபவத்திற்குப் பிறகு, கபிதா சர்க்கார் 2023-ல் மாநில சட்ட சேவை ஆணையத்தின் வழக்கறிஞராக சேர்ந்தார். ஏழை எளிய மக்களுக்கு வழக்கறிஞர்களை இந்த அமைப்பு வழங்குகிறது.

மரண தண்டனையை எதிர்க்கும் கபிதா சர்க்கார்

கொல்கத்தா பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சஞ்சய் ராயின் வழக்கறிஞர் கபிதா சர்க்கார் மரண தண்டனையை எதிர்ப்பவபர். தன்னை பொறுத்தவரை ஆயுள் தண்டனைதான் மிகப்பெரிய தண்டனை. ஒரு குற்றவாளி தனது வாழ்நாளில் செய்த தவறுகளுக்குப் பரிகாரம் செய்ய வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்று கபிதா சர்க்கார் கூறுகிறார்.

கபிதா சர்க்காருக்கு நீதிமன்றம் ஏன் பொறுப்பை வழங்கியது?

நீதிமன்றம் ஏன் கபிதா சர்க்காரை சஞ்சய் ராயின் வழக்கை வாதிட நியமித்தது என்ற கேள்வி அனைவரின் மனதிலும் எழுகிறது. சியால்டா நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்ட சஞ்சய் ராயின் சார்பாக எந்தவொரு வழக்கறிஞரும் ஆஜராக முன்வராத நிலையில், நீதிமன்றம் கபிதா சர்க்காரை நியமித்தது. மேற்கு வங்க மாநில சட்ட சேவை ஆணையத்தின் ஒரே வழக்கறிஞர் கபிதா என்பதும் இதற்கு ஒரு காரணம்.

Kolkata Case | கொல்கத்தா பயிற்சி மருத்துவர் கொலை வழக்கு! CBI விசாரணையில் திருப்பம்!

குற்றம் சாட்டப்பட்ட ஒருவரின் வழக்கை வாதிட மறுத்த பிறகு வேறு ஒருவருக்கு இந்தப் பொறுப்பு வழங்கப்பட்டது இது முதல் முறை அல்ல. முன்னரும் இதுபோன்ற பல வழக்குகள் நடந்துள்ளன.

1- அஃப்சல் குரு வழக்கு

டிசம்பர் 13, 2001 அன்று நாடாளுமன்றத் தாக்குதலில் ஈடுபட்ட அஃப்சல் குருவின் சார்பாக பிரபல வழக்கறிஞர்களான ராம் ஜெத்மலானி மற்றும் ஏபி சிங் ஆகியோர் ஆஜராகினர். இருப்பினும், 2013-ல் அஃப்சல் குரு தூக்கிலிடப்பட்டார்.

2- கசாப் வழக்கு

2008 ஆம் ஆண்டு மும்பை தாக்குதல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அஜ்மல் கசாப் சார்பாக ஆஜராக மகாராஷ்டிரா மாநில சட்ட சேவை ஆணையம் அமீன் சோல்கர் மற்றும் ஃபர்ஹானா ஷா ஆகிய இரு வழக்கறிஞர்களை நியமித்தது.

3- நிர்பயா பாலியல் வன்கொடுமை வழக்கு

டிசம்பர் 2012-ல் டெல்லியில் நடந்த நிர்பயா பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் சார்பாக ஆஜராக அனைத்து வழக்கறிஞர்களும் மறுத்துவிட்டனர். பின்னர் ஏபி சிங் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் சார்பாக ஆஜரானார். இருப்பினும், நீண்ட விசாரணைக்குப் பிறகு, மார்ச் 2020-ல் நிர்பயாவை பாலியல் வன்கொடுமை செய்த 4 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

Tap to resize

Latest Videos

click me!