நம்பகத்தன்மையுள்ள பாட்டில் நீர் எது? ஐ.பி.சி. ஆய்வு...

First Published Oct 21, 2016, 6:31 AM IST
Highlights


இந்தியாவில் பாட்டிலில் அடைத்து விற்பனை செய்யப்பட்டு வருபவைகளில் நம்பகத்தன்மையுள்ள "பாட்டில் நீர்" என்று ரயில்வே நீரை ஐபிசி இன்ஃபோ மீடியா என்ற நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இது குறித்து, ஐ.பி.சி. இன்ஃபோ மீடியா என்ற நிறுவனம், இந்தியாவில் நம்பகத்தன்மையுள்ள பாட்டில் நீர் குறித்து ஒரு ஆய்வு நடத்தியது. 

இந்த ஆய்வில், 2016 ஆம் ஆண்டுக்கான மிக நம்பகத்தன்மையுள்ள பாட்டில் நீராக, இந்திய ரயில்வே துறையால் தயாரிக்கப்படும் "ரயில் நீர்" தேர்ந்துடுத்துள்ளது. 

ரயில் நீர், இந்தியாவில் ஆறு இடங்களில் ஆலை வைத்து தயாரித்து வருகிறது ரயில்வே துறை. ரயில் நீர் விற்பனையில் வருடா வருடம் அதிகரித்து வருவதாகவும் ஐ.பி.சி. தெரிவித்தள்ளது. 

2014-15-ம் ஆண்டுகளில் ரூ.81.03 கோடியாக இருந்த ரயில் நீரின் வியாபாரம் 2015-16-ம் ஆண்டுகளில் ரூ. 118.48 கோடியாக அதிகரித்துள்ளது. அதே காலகட்டத்தில், ரூ.11.95 கோடி பாட்டில்களில் இருந்து ரூ.14.40 கோடியாக உயர்த்தியுள்ளது.

click me!