புதிய நிறுவனத்துக்கு மாறப் போகிறீர்களா? - பி.எப். அமைப்பு புதிய வசதி அறிமுகம்

First Published Sep 22, 2017, 8:51 PM IST
Highlights
When it comes to work from one company to another company There was a need to pay Form-13 to change the account. Henceforth it will automatically change. The system said.


ஒரு நிறுவனத்தில் இருந்து மற்றொரு நிறுவனத்துக்கு பணிக்கு மாறும்போது, அங்குள்ள பி.எப். கணக்கை மாற்ற படிவம்-13 நிரப்பிக்க கொடுக்க வேண்டி இருந்தது. இனிமேல், அது தானாகவே மாறிக்கொள்ளும் என பி.எப். அமைப்பு தெரிவித்துள்ளது.

 ஒரு நிறுவனத்தில் புதிதாக சேரும் ஊழியர் ஒருவர் தான் முன்பு வேலை செய்த நிறுவனத்தில் வைக்கப்பட்டு இருந்த பி.எப். கணக்கு குறித்து படிவம்-13ல் நிரப்பி கொடுக்க வேண்டும். இது தான் இப்போது கடைபிடிக்கப்பட்டு வரும் முறையாகும்.

ஆனால், இனி புதிதாக படிவம்-11 அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த படிவத்தில் கேட்கப்பட்டுள்ள விவரங்களை நிரப்பி கொடுத்துவிட்டால், அனைத்து பணமும் புதிய நிறுவனத்தின் பி.எப். கணக்குக்கு தானாகவே மாறிக் கொள்ளும் என பி.எப். அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இ.பி.எப். ஓ. அமைப்பு இப்போது ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் படிவம்-13க்கு பதிலாக புதிதாக படிவம் 11 அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த படிவத்தில் பி.எப். கணக்கு வைத்து இருக்கும் ஊழியர் தனது முன்பு பணியாற்றிய நிறுவனத்தில் வழங்கப்பட்ட பி.எப். எண், வங்கிக் கணக்கு, ஆதார் எண் நிரப்பி அளித்தால், தானாகவே பணம் புதிய நிறுவனத்தில் சேரும்போது மாற்றப்படும்.

இப்போது, அமைப்புசார் துறைகளில் பணியாற்றும் ஊழியர்கள் பணிமாறும்போது, படிவம் -13யை பயன்படுத்தி பி.எப். கணக்கை மாற்றி வருகிறார்கள். இனி அது தேவைப்படாது.

பி.எப். அமைப்புக்கு ஆண்டுதோறும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஒரு கோடி விண்ணப்பங்கள் வருகின்றன. இதில் பி.எப். பணம் பெறுவது, ஓய்வூதியம், இறப்பு கோரிக்கை, பி.எப். பரிமாற்றம் ஆகியவை ஆகும்.இதில் பி.எப். பரிமாற்றம் மட்டும் 15 சதவீதம் புகார்கள் வருகின்றன.

இந்நிலையில், புதிய வேலைக்காக ஒரு நிறுவனத்தின் சேரும்போது, ஏற்கனவே கணக்கில் இருந்த பணத்தை எளிதாக மாற்ற இந்த வசதி செய்யப்பட்டுள்ளது.

click me!