Ration : ரேஷனில் இது கிடைக்காதா ? அச்சச்சோ.!! குடும்ப அட்டைதாரர்கள் ஷாக்.!

By Raghupati RFirst Published Jun 20, 2022, 11:44 AM IST
Highlights

Pradhan Mantri Garib Kalyan Anna Yojana : பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா (PMGKAY) திட்டத்தின் கீழ் கிடைக்கும் கோதுமை மற்றும் அரிசி ஒதுக்கீட்டில் மத்திய அரசு பெரிய மாற்றத்தை செய்துள்ளது.

பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா

பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா உதவியுடன் நாட்டின் 80 கோடிக்கும் அதிகமான மக்களுக்கு இலவச உணவு தானியங்கள் வழங்கப்படுகின்றன. அதன் ஒருபகுதியாக ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு இலவச அரிசி, கோதுமை மற்றும் தானியங்கள் வழங்கப்படுகிறது. இந்நிலையில் கரிப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் 11 மாநிலங்களுக்கு கோதுமை ஒதுக்கீட்டில் உணவு அமைச்சகம் திருத்தம் செய்துள்ளது. 

அதன்படி அரசு கோதுமைக்கான ஒதுக்கீட்டை குறைத்து, தற்போது அரிசிக்கான ஒதுக்கீட்டை உயர்த்தியுள்ளது. சில மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இந்த மாற்றம் முன்னதாகவே செய்யப்பட்டுள்ளது. இந்த மாற்றத்திற்குப் பிறகு, இந்த மாநிலங்களின் மக்களுக்கு முன்பை விட குறைவான கோதுமையும், அதிக அளவு அரிசியும் வழங்கப்படும். தமிழ்நாடு, கேரளா, பீகார், உத்திரபிரதேஷம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு மத்திய தொகுப்பிலிருந்து கோதுமை கிடைக்காது. 

கோதுமை கிடையாது

அரிசி மட்டுமே ஒதுக்கீடு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் டெல்லி, குஜராத், மகாராஷ்டிரா, மத்திய பிரததேஷம், மேற்கு வங்கம், உத்தராகண்ட், ஜார்காண்ட் ஆகிய மாநிலங்களுக்கு கோதுமை அளவு குறைவாக மத்திய தொகுப்பிலிருந்து ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோதுமை பற்றாக்குறை காரணமாக தமிழகத்திலும் ரேஷன் கடைகளில் வழங்கப்படும் கோதுமை அளவும் குறைக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் உணவு வழங்கல் துறை ஆணையர் பிறப்பித்த உத்தரவு இந்த செய்தியினை உண்மையாக்கி உள்ளது. 

அதன்படி, இம்முறை பயனாளிகளுக்கு கோதுமைக்குப் பதிலாக 5 கிலோ அரிசி மட்டுமே வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி இந்த மாதம் முதல் ரேஷன் பயனாளிகளுக்கு கோதுமைக்குப் பதிலாக 5 கிலோ அரிசி விநியோகிக்கப்படும். இந்த முடிவு முதலில் உ.பியில் எடுக்கப்பட்டது. ஆனால் தற்போது உ.பி.யுடன் சேர்த்து பல மாநிலங்கள் கோதுமைக்கான ஒதுக்கீட்டை குறைத்துள்ளது. இந்த நிலையில் தற்போது பெரும்பாலான மாநிலத்தில் கோதுமை கொள்முதல் குறைந்ததால், ரேஷன் ஒதுக்கீட்டில் கோதுமையின் அளவைக் குறைக்க அரசு முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தக் கட்டுப்பாடு பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்துக்கு மட்டுமே பொருந்தும்’ என்றும் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : இரட்டை இலையை முடக்கிவிடுவேன்.. இப்படி மிரட்டாதீங்க ஓபிஎஸ்.! ரகசியத்தை உடைத்த அதிமுக பிரமுகர்

click me!