இந்திய முழுக்க 74 லட்சம் கணக்குகள் முடக்கம்.. அதிரடி காட்டிய What'sapp - என்ன காரணத்திற்காக தெரியுமா?

By Ansgar R  |  First Published Oct 2, 2023, 6:16 PM IST

உலக அளவில் பலகோடி பயனாளர்களை கொண்ட வாட்ஸ்அப் நிறுவனம், கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இந்தியாவில் உள்ள 74.2 லட்சம் கணக்குகளை தடை செய்துள்ளது. அதற்கு முந்தைய மாதத்தில் அந்நிறுவனம் தடை செய்த கணக்குகளை விட இது சுமார் 2 லட்சம் அதிகம் என்று கூறப்படுகிறது.


கடந்த 2021 ஆம் ஆண்டின் புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளுக்கு இணங்க WhatsApp இந்தக் கணக்குகளைத் தடை செய்தது தெரியவந்துள்ளது. இந்தியாவில் தடைசெய்யப்பட்ட WhatsApp கணக்குகளில், சுமார் 3,506,905 கணக்குகள், பயனர்களிடமிருந்து எந்தவித புகாரும் வருவதற்கு முன்பாகவே தடைசெய்யப்பட்டுள்ளன என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

"துஷ்பிரயோகத்தைத் தடுப்பதிலும் அதை எதிர்த்து போராடும் விதமாகவும் நாங்கள் எங்கள் சேவைகளை வழங்கி வருகின்றோம். எங்கள் பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் கட்டுப்பாடுகளுக்கு கூடுதலாக, பொறியாளர்கள், தரவு விஞ்ஞானிகள், ஆய்வாளர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் சட்ட அமலாக்கத்தில் நிபுணர்கள் அடங்கிய குழுவை நாங்கள் பயன்படுத்துகிறோம்" என்று வாட்ஸ்அப் தனது அக்டோபர் மாத இந்திய மாதாந்திர அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Tap to resize

Latest Videos

பெங்களூரு - Carpooling செயலிகளுக்கு தடை இல்லை.. ஆனால்.. அமைச்சர் ராமலிங்க ரெட்டி கூறிய தகவல் என்ன?

மேலும் வெளியான ஒரு அறிக்கையில் அந்நிறுவனம் பின்வருமாறு கூறியது, "இந்த பயனர்-பாதுகாப்பு அறிக்கையில் பெறப்பட்ட, பயனர்களின் புகார் விவரங்கள் மற்றும் வாட்ஸ்அப் எடுத்த நடவடிக்கைகள் மற்றும் எங்கள் தளத்தில் துஷ்பிரயோகத்தை எதிர்த்து போரிடும் வாட்ஸ்அப்பின் தடுப்பு நடவடிக்கைகள் உள்ளன" என்றும் தெரிவித்துள்ளது.

மத்திய அரசாங்கம் இந்த ஆண்டின் தொடக்கத்தில் குறைகள் மேல்முறையீட்டுக் குழு (GAC) பொறிமுறையை அறிமுகப்படுத்தியது, இது பயனர்கள் தங்கள் புகார்களை ஒரு புதிய போர்ட்டலில் தாக்கல் செய்வதன் மூலம் சமூக ஊடக தளங்களின் முடிவுகளுக்கு எதிராக மேல்முறையீடு செய்ய அனுமதிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில், WhatsApp அதன் பயன்பாட்டின் ஆண்ட்ராய்டு பதிப்பில் மெஸாஜ் சேட்டிங் தரத்தை மறுவடிவமைப்பு செய்கிறது. பயன்பாட்டில் உள்ள சில வண்ணங்களை மாற்றுவது முதல் ஒருசில மாற்றங்களை அந்நிறுவனம் செய்துவருகிறது. 

வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை கவிழ்க்க சதி.. உதய்பூர் - ஜெய்பூர் அருகே அதிர்ச்சி சம்பவம் - வைரல் வீடியோ

click me!