ஜூன் மாதத்தில் கொட்டும் மழை.. எல் நினோ விளைவு.. அன்றே கணித்த அமெரிக்கா.! ஆய்வாளர்கள் பகீர் - என்ன காரணம்?

By Raghupati R  |  First Published Jun 19, 2023, 9:02 AM IST

இதுவரை மனித வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு ஜூன் மாதத்தில் வெப்பம் நிலவி வருகிறது என்று நிபுணர்கள் எச்சரித்துள்ள நிலையில், மழையும் பெய்து வருகிறது. இதற்கு என்ன காரணம்? எல் நினோ விளைவால் இது நடக்கிறதா? நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை பார்ப்போம்.


தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வரும் மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 48 மணி நேரத்திற்கு தமிழ்நாட்டின் பல இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று அறிவித்தது. சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் நள்ளிரவு முதல் விடிய விடிய கனமழை பெய்து வருகிறது.

குறிப்பாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளான செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் சூறைகாற்றுடன் நள்ளிரவு முதல் கனமழை பெய்தது.  கிண்டி, மீனம்பாக்கம், மாம்பலம், சைதாப்பேட்டை, குரோம்பேட்டை, எழும்பூர், சேத்துப்பட்டு, நூங்கம்பாக்கம், வேளச்சேரி, ஈக்காட்டுதாங்கல் என பல இடங்களில் மழை கொட்டி வருகிறது.

Tap to resize

Latest Videos

இதுகுறித்து கூறிய தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான், “27 ஆண்டுகளுக்குப் பிறகு (வரலாற்றுச் சிறப்புமிக்க 1996 முதல்), சென்னையில் ஜூன் மாதம் பள்ளி விடுமுறை அறிவிக்கப்பட்டது. சென்னையில் பல நூற்றாண்டுகள் மற்றும் அடையாறு போன்ற தென் சென்னையில் சில இடங்களில் 150 மி.மீ என்று நினைவில் கொள்ளுங்கள், 1991, 1996க்கு பிறகு இப்போது 2023ல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பல நூற்றாண்டுகளாக வரலாறு காணாத மழை பெய்துள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.

 

27 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் கொட்டிய மழை.. 2k கிட்ஸ் அதிர்ஷ்டசாலிகள் எப்படி.? வெதர்மேன் விளக்கம்

சென்னையில் 27 ஆண்டுகளுக்கு பிறகு ஜூனில் பெய்த கனமழை பற்றி பார்க்கலாம். கடந்த 1996ஆம் ஆண்டு ஜூன் மாதம் 28 செ.மீ மழை பதிவாகி இருந்தது. நடப்பாண்டு ஜூன் மாதம் 13.8 செ.மீ மழை பதிவான நிலையில் கனமழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு 100 டிகிரிக்கும் மேல் கொளுத்தியது வெயில்.

இயல்புக்கு மாறாக அதிக வெயில் இந்த வருடத்தில் குறிப்பாக தமிழகத்தில் அடித்தது. கத்திரி வெயில் முடிந்ததற்கு பிறகு இந்த நிலையே தொடர்ந்தது. அதேபோல சில நாட்களில் இரவு நேரங்களில் ஆங்காங்கே மழை பெய்தது. தற்போது அதற்கு எதிர்மாறாக சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது.  வானிலை இயல்புக்கு மாறாக அடிக்கடி மாறிக்கொண்டிருக்கிறது என்பதை இதிலிருந்தே புரிந்து கொள்ளலாம்.

பருவநிலை மாற்றம், புவி வெப்ப மயமாதல் உள்ளிட்ட காரணங்களால் வெப்பம் தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. கடந்த ஆண்டுகளில் இல்லாத வகையில் இந்தாண்டு கோடை வெப்பம் உச்சம் தொட்டிருந்தது. இதுவரை வரலாற்றிலே இல்லாத அளவுக்கு ஜூன் மாதத்தின் சராசரி வெப்பம் உச்சத்தில் இருப்பதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் காலநிலை கண்காணிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. முந்தைய ஆண்டுகளைக் காட்டிலும் இப்போது வெப்பம் கணிசமாக உயர்ந்துள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது.

மணிப்பூர் வன்முறை: குறிவைத்து தாக்கப்படும் பாஜக தலைவர்களின் வீடு, அலுவலகங்கள்.. பின்னணி என்ன?

எல் நினோ காலநிலை நிகழ்வு ஆரம்பித்துள்ளது என்று கூறப்படுகிறது. எல் நினோ என்பது பசிபிக் பெருங்கடலில் கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி வீசும் காற்றின் வேகம் மற்றும் திசையில் ஏற்படும் மாற்றமாகும். பசிபிக் பெருங்கடலில் பூமத்திய ரேகையை ஒட்டியுள்ள பகுதிகளில் அதிகமான வெப்பம் ஏற்பட்டால், அதனால் கடும் பாதிப்புகள் ஏற்படும். இந்த நிலையில் தீவிர வானிலை மற்றும் அதிக வெப்பம் அடிக்கடி நிகழும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எல் நினோ ஏற்கனவே பூமியை பாதிக்கக் தொடங்கியுள்ளதாக அமெரிக்காவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் குழு உறுதி செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

எல் நினோ எவ்வளவு வலிமையானதாக இருக்கிறது என்பதைப் பொறுத்துதான் அதீத மழை பெய்வதோ அல்லது கடுமையான வறட்சி ஏற்படுவதோ நிர்ணயமாகும். இந்தியாவை பொறுத்தவரை எல் நினோ பாதிப்பு அதன் தாக்கத்தை ஏற்படுத்த 70 சதவீதம் வாய்ப்புகள் இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து இந்திய வானிலை மையம் தெரிவித்ததாவது, இயல்புநிலை அல்லது அதற்கு மேல் மழை பெய்வதற்கு 67 சதவிகிதம் வாய்ப்புள்ளது.

வட மேற்கு, வடக்கிழக்குப் பகுதிகளில் தென்மேற்குப் பருவமழை இயல்பு அல்லது அதற்கு மேலான அளவில் பொழியும்.ஜூலை மாதத்தில் எல்நினோ நிலைகள் உருவாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மழைக்காலத்தின் இரண்டாம் பாதியில் அவற்றின் தாக்கம் உணரப்படலாம்” என்று எச்சரித்துள்ளது. எனவே காலநிலை மாற்றத்தால் அந்தந்த காலங்களில் வரவேண்டிய மழை மற்றும் வெயில் மாறுபடுவது வருங்காலத்தில் பெரும் ஆபத்தை உண்டாக்கலாம் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

SGB 2023-24: ஜூன் 19 அன்று தொடங்கவுள்ள தங்க பத்திர விற்பனை.. முதலீட்டாளர்களே மிஸ் பண்ணீடாதீங்க..!

click me!