
பாகிஸ்தானில் இருந்து நேற்று மாலை இந்தியாவின் பஞ்சாப், ஜம்மு காஷ்மீர், ராஜஸ்தான், சண்டிகர் மாநிலங்களை குறிவைத்து ட்ரோன்கள், ஏவுகணைகளை இஸ்லாமாபாத் அனுப்பியது. இவற்றை துல்லியமாக கணித்து வான்வெளியில் அழித்தது இந்தியாவின் S - 400 சுதர்சன் சக்ரா. இதன் சிறப்பு என்னவென்று பார்க்கலாம்.
S-400 சுதர்சன் சக்ரா என்றால் என்ன?
S-400 உலகின் மிகவும் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பம் கொண்ட நீண்ட தூர இலக்கை குறிவைத்து ஏவுகணைகளை வான்வெளியில் அழிக்கக் கூடியது.
இந்திய விமானப் படையின் கட்டுப்பாட்டு மையத்துடன் ஒருங்கிணைக்கப்பட்ட ஒவ்வொரு S-400-வான்வெளி பாதுகாப்பு அமைப்பும் இரண்டு பேட்டரிகளைக் கொண்டுள்ளது. ஒவ்வொன்றும் ஆறு லாஞ்சர்கள், மேம்பட்ட ரேடார் மற்றும் ஒரு கட்டுப்பாட்டு மையம் ஆகியவற்றைக் கொண்டுள்ளன. ஒரு பேட்டரிக்கு 128 ஏவுகணைகளை அழிக்கலாம்.
ரஷ்யாவிடம் இருந்து வாங்கப்பட்ட S-400 Sudarshan Chakra
வான் பாதுகாப்பு ஏவுகணை தடுப்பு கருவியான S-400 Sudarshan Chakra ரஷ்யாவிடமிருந்து இந்தியா வாங்கியது. ஐந்து S-400 Sudarshan Chakra ஏவுகணை அமைப்பை ரூ.35,000 கோடிக்கு வாங்குவதற்கு 2018-ல் இந்தியா ஒப்பந்தம் செய்திருந்தது. இதுவரை, டெல்லி ஐந்து படைப்பிரிவுகளை வாங்கியுள்ளது. அவற்றில் மூன்று ஏற்கனவே செயல்பாட்டில் உள்ளன. மேலும் இரண்டு 2026 க்குள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
S-400 Sudarshan Chakra திறன்கள் மற்றும் தாக்கம்
ஐந்து நிமிடங்களில் பயன்படுத்தக்கூடிய S-400 வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்பு, திருட்டுத்தனமான விமானங்கள், போர் விமானங்கள், ட்ரோன்கள் மற்றும் குரூஸ் அல்லது பாலிஸ்டிக் ஏவுகணைகள் போன்ற வான்வழி அச்சுறுத்தல்களைக் கண்டறிந்து, கண்காணிக்க மற்றும் ஈடுபடுத்த முடியும் - 400 கிமீ வரை மற்றும் 30 கிமீ உயரத்தில் கண்காணித்து அழிக்கும்.
2024 ஆம் ஆண்டு IAF நடத்திய ஒரு பயிற்சியின் போது, சுதர்ஷன் S-400 - 80% துல்லியமாக செயல்பட்டது. மீதமுள்ளவை அவற்றின் பணிகளை நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
S-400 ஏவுகணை பாதுகாப்பு அமைப்பு உலகின் மிகவும் மேம்பட்ட நீண்ட தூர வான் பாதுகாப்பு அமைப்புகளில் ஒன்றாகக் கூறப்படுகிறது. 2014 ஆம் ஆண்டில் S-400 ஏவுகணை அமைப்பை வாங்கிய முதல் நாடு சீனா.
S-400 என்பது ஏவுகணைகள், சக்திவாய்ந்த ரேடார், கட்டளை மையம் என மூன்று கூறுகளைக் கொண்டுள்ளது. இது விமானம், கப்பல் ஏவுகணைகள் மற்றும் வேகமாக நகரும் இடைநிலை தூர பாலிஸ்டிக் ஏவுகணைகளை கூட தாக்கி அழிக்கும் திறன் கொண்டது.
S-400 அதன் நீண்ட தூர திறன்கள் காரணமாக நேட்டோ உறுப்பினர்களால் ஒரு பெரிய அச்சுறுத்தலாகக் கருதப்படுகிறது.
S-400 கிட்டத்தட்ட அனைத்து வகையான நவீன போர் விமானங்களையும் அழிக்கும் திறன் கொண்டது. அதன் ரேடார் 600 கிமீ தொலைவில் உள்ள இலக்குகளைக் கண்காணிக்க முடியும்.
அக்டோபர் 2018 இல், S-400 வான்வெளி பாதுகாப்பு ஏவுகணை அமைப்புகளின் ஐந்து அலகுகளை வாங்க இந்தியா ரஷ்யாவிடம் 42 ஆயிரம் கோடிக்கு ஒப்பந்தம் செய்து இருந்தது. இன்னும் ஒரு அழகு இந்தியாவுக்கு வர வேண்டியது இருக்கிறது.
இந்தியாவில் நான்கு S-400 வான்வெளி பாதுகாப்பு அமைப்புகள் உள்ளன. ஒன்று பதான்கோட்டில் இருந்து ஜம்மு-காஷ்மீர் மற்றும் பஞ்சாப்பை பாதுகாக்கிறது. மற்றொன்று ராஜஸ்தான் மற்றும் குஜராத்தில் உள்ள முக்கிய பகுதிகளைப் பாதுகாக்கிறது. இந்தியாவில், S-400 வான் பாதுகாப்பு அமைப்பு ஆயுதப் படைகளால் "சுதர்ஷன் சக்ரா" என்று அழைக்கப்படுகிறது.
இந்திய புராணங்களுடன் தொடர்புடையது சுதர்ஷன் சக்ரா. அங்கு சுதர்ஷன் சக்ரா என்பது விஷ்ணுவால் பயன்படுத்தப்படும் ஒரு சக்திவாய்ந்த சுழலும் ஆயுதமாக கருதப்படுகிறது. இதேபோல், S-400 அமைப்பு இந்தியாவின் பாதுகாப்பு ஆயுதக் களஞ்சியத்தில் ஒரு சக்திவாய்ந்த கருவியாகக் கருதப்படுகிறது, இது வான்வழி அச்சுறுத்தல்களை விரைவாகக் கண்டறிந்து அழிக்கும் திறன் கொண்டது. தற்போது பாகிஸ்தானில் இருந்து வரும் விமானங்களை, ட்ரோன்களை இந்த S-400 சுதர்ஷன் சக்ரா அழித்து வருகிறது.
இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் நேற்று மாலை முதலே மீண்டும் பதற்றம் நிலவி வருகிறது. இந்தியாவில் எல்லையில் இருக்கும் ராஜஸ்தான், பஞ்சாப், ஜம்மு காஷ்மீர், சண்டிகர் போன்ற பகுதிகளை குறிவைத்து தாக்குதல்களை பாகிஸ்தான் நடத்தியது. பாகிஸ்தான் இந்தியாவை ஏவுகணைகளை கொண்டு தாக்குவதற்கு சீனாவில் தயாரிக்கப்பட்ட J-10 விமானங்களை பயன்படுத்தியது. உடனுக்கு உடன் விரைந்து சென்று அவற்றை S-400 Sudarshan Chakra அழித்தது. நிகழ்கால பிரம்மாவாக S-400 Sudarshan Chakra செயல்பட்டு வருகிறது.