ராஷ்மிக்காவின் Deep Fake வீடியோ.. உருவாக்கியது ஏன்? கைதான 24 வயது நபர் கொடுத்த பரபரப்பு வாக்குமூலம்!

Ansgar R |  
Published : Jan 20, 2024, 09:02 PM IST
ராஷ்மிக்காவின் Deep Fake வீடியோ.. உருவாக்கியது ஏன்? கைதான 24 வயது நபர் கொடுத்த பரபரப்பு வாக்குமூலம்!

சுருக்கம்

Rashmika Mandanna : நடிகை ராஷ்மிகா மந்தனாவின் deep fake வீடியோவை வெளியிட்ட 24 வயது நபர், ஆந்திராவில் கைது செய்யப்பட்டு டெல்லி கொண்டுசெல்லப்பட்டார்.

இன்று போலீசார் அந்த இளைஞரிடம் நடத்திய விசாரணையில் பல தகவல் வெளியாகியுள்ளது. நடிகை ரஷ்மிகா மந்தனாவின் டீப் ஃபேக் வீடியோவை உருவாக்கி பரப்பியதற்காக கைது செய்யப்பட்ட அந்த 24 வயது இளைஞர், இன்ஸ்டாகிராமில் தன்னை பின்தொடர்பவர்களைப் அதிகமாக்கவே இதை செய்ததாக போலீஸாரிடம் தெரிவித்துள்ளார். 

நாடு முழுவதும் டீப்ஃபேக் பற்றிய விவாதத்தை கிளப்பிய இந்த வழக்கில் மூளையாக செயல்பட்டவர் ஆந்திராவில் கைது செய்யப்பட்டு புதுடெல்லிக்கு அழைத்து வரப்பட்டார். டீப்ஃபேக்குகள் என்பது செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி வடிவமைக்கப்பட்ட செயற்கை ஊடகத்தின் ஒரு வடிவமாகும். காட்சி மற்றும் ஆடியோ கூறுகளை கையாள அதிநவீன வழிமுறைகளை இது பயன்படுத்துகிறது. 

நடிகை ராஷ்மிகா மந்தனா.. பாடாய் படுத்திய Deep Fake Video - முக்கிய குற்றவாளியை அலேக்காக தூக்கிய போலீசார்!

குற்றம் சாட்டப்பட்டவர் டிஜிட்டல் மார்கெட்டரான ஈமணி நவீன் என அடையாளம் காணப்பட்டுள்ளார். டீப்ஃபேக் வீடியோவுடன் தொடர்புடைய 500க்கும் மேற்பட்ட சமூக ஊடக கணக்குகளை ஆய்வு செய்த பின்னர், நவீன் மீது டெல்லி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில், 24 வயதான நபர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார் என்றும், இன்ஸ்டாகிராமில் Followersகளைப் பெறுவதற்காக அந்த வீடியோவை உருவாக்கியதாகக் கூறினார்.
 
தான் ராஷ்மிகா மந்தனாவின் ரசிகன் என்றும், ராஷ்மிக்காவின் Fan Pageஐ நடத்தி வந்ததாகவும் நவீன் கூறினார். இதனால் தனக்கு சிக்கல் ஏற்படும் என்பதை உணர்ந்த நவீன் அந்த பதிவுகளை நீக்கிவிட்டு இன்ஸ்டாகிராம் சேனலின் பெயரை மாற்றியுள்ளார். அவர் தனது சாதனங்களிலிருந்து தொடர்புடைய டிஜிட்டல் தரவையும் அகற்றியுள்ளார். 

புதுச்சேரியில் கல்லூரி மாணவனுக்காக சமாதானம் பேசச்சென்ற இளைஞர் வெட்டி படுகொலை

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

இன்றும் விமான ரத்துகள் இருக்கலாம்.. இண்டிகோவுக்கு டிஜிசிஏவின் அதிரடி நோட்டீஸ்! எப்போது சரியாகும்?
அதிர்ச்சி செய்தி! கோவா நைட் கிளப்பில் சிலிண்டர் வெடிப்பு – 23 பேர் பலியான சோகம்