“24 டன் எடை கொண்ட பெய்லி பாலத்தின் கட்டுமானப் பணிகள் இன்று மாலை முடிக்கப்பட்டது. இதற்காக பொறியாளர்கள் இரவு முழுவதும் பணியில் ஈடுபட்டனர்" என பாரா ரெஜிமென்ட் பயிற்சி நிலையத்தின் தளபதி பிரிகேடியர் அர்ஜுன் சேகன் தெரிவித்தார்.
வயநாடு நிலச்சரிவில் சிக்கித் தவிக்கும் மக்களை மீட்கும் பணியை தீவிரப்படுத்த இந்திய ராணுவம் 190 அடி நீளமுள்ள பெய்லி பாலத்தை கட்டும் பணியை நிறைவு செய்துள்ளது. ஜேசிபி மற்றும் பிற அதிநவீன இயந்திரங்கள் மூலம் இந்தப் பாலம் 3 நாட்களுக்குள் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
வயநாடு நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தில் பெய்லி பாலம் கட்டும் பணி முடிவடைந்துள்ள நிலையில், 350 பேர் கொண்ட ராணுவக் குழு போர்க்கால அடிப்படையில் மீட்புப் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
undefined
“24 டன் எடை கொண்ட பெய்லி பாலத்தின் கட்டுமானப் பணிகள் இன்று மாலை முடிக்கப்பட்டது. இதற்காக பொறியாளர்கள் இரவு முழுவதும் பணியில் ஈடுபட்டனர்" என பாரா ரெஜிமென்ட் பயிற்சி நிலையத்தின் தளபதி பிரிகேடியர் அர்ஜுன் சேகன் தெரிவித்தார்.
தாராள மனசைக் காட்டிய ஃபகத் பாசில், நஸ்ரியா! வயநாடு நிலச்சரிவுக்கு ரூ.25 லட்சம் நிவாரண நிதி!
நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட முண்டக்கை பகுதிக்குச் செல்ல முடியாத சூழல் நிலவியதால் மீட்புப் பணிகள் தடைபட்டுள்ளன. அங்கு மீட்புப் பணிகளை மேற்கொள்ள இந்த பெய்லி பாலம் மிகவும் முக்கியமானது. 90 டன் எடையைத் தாங்கக்கூடிய இந்தப் பாலம், கடினமான நிலப்பரப்பிலும், சவாலான வானிலையிலும் பயன்படக்கூடியது.
பெய்லி பாலம் பொதுவாக ராணுவ பயன்பாட்டுக்கு உட்பட்டது. இரண்டாம் உலகப் போரின் போது பிரிட்டிஷ் பொறியாளர் சர் டொனால்ட் பெய்லியால் உருவாக்கப்பட்டது. போர் மண்டலங்களில் விரைவாகப் பயன்படுத்தக்கூடிய, வடிவமைப்பு கொண்டது. இது ஒருவகையான ரெடிமேட் பாலம் போல உதவி புரிகிறது. நிலச்சரிவுகளைத் தொடர்ந்து மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளவும், பிற அவசரகால சூழ்நிலைகளிலும் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.
ஸ்ட்ரீட் ஃபுட் ரசிகரான முகேஷ் அம்பானி! குடும்பத்துடன் சாப்பிடும் சாலையோர உணவு என்னென்ன தெரியுமா?