Wayanad Landslide : நொடிப்பொழுதில் சரிந்த மலை...4 பேர் பலி! பதறவைக்கும் சிசிடிவி காட்சி!

Published : Jul 07, 2026, 03:50 PM IST
Wayanad Landslide Kills Four Migrant Workers CCTV Shows Narrow Escape

சுருக்கம்

Wayanad Landslide : கேரள மாநிலம் வயநாடு, கள்ளாடி பகுதியில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் 4 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். கட்டுமானப் பணியின் போது குன்று சரிந்ததில் பேருந்துகள் மண்ணில் புதைந்தன. 9 பேர் காயமடைந்து சிகிச்சையில் உள்ளனர், 6 பேரைக் காணவில்லை. மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

வயநாடு: கேரளாவின் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் 4 பேர் உயிரிழந்த நிலையில், அதன் பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன. இந்த கோர விபத்தில் இருந்து 5 பேர் நூலிழையில் தப்பி ஓடும் காட்சிகள் அதில் பதிவாகியுள்ளது.

வயநாட்டின் கள்ளாடி பகுதியில் உள்ள மீனாட்சி பாலம் அருகே இன்று காலை இந்த பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. வயநாடு - கள்ளாடி சுரங்கப்பாதை பணிகள் நடக்கும் இடத்தில் இந்த விபத்து நடந்துள்ளது. பாலத்தின் அருகே இருந்த ஒரு குன்று, கட்டுமானப் பகுதி மீது மொத்தமாக சரிந்து விழுந்தது. இதில், சுரங்கப்பாதை பணிக்காக வெட்டி வைக்கப்பட்டிருந்த மண் சரிந்து விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்த விபத்தில் வெளிமாநிலத் தொழிலாளர்கள் நான்கு பேர் உயிரிழந்ததாக தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது. மண்ணுக்கு அடியில் இன்னும் எத்தனை பேர் சிக்கியுள்ளனர் என்பது குறித்து தெளிவான தகவல் இல்லை. காயமடைந்த ஒன்பது பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் ஆறு பேரைக் காணவில்லை. அவர்களைத் தேடும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

தொழிலாளர்களை ஏற்றி வந்த இரண்டு பேருந்துகளும் மண்ணில் புதைந்துள்ளன. சுரங்கப்பாதைக்காக கட்டப்பட்டிருந்த கான்கிரீட் சுவரும் இடிந்து விழுந்துள்ளது. கடந்த சில நாட்களாக வயநாடு மாவட்டத்தில் கனமழை பெய்து வந்த நிலையில், இந்த நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. விபத்து நடந்த பகுதிக்கு உடனடியாகச் செல்லுமாறு அமைச்சர்களுக்கு கேரள முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களின் விவரங்கள்:

1. ஹிரா குமார்

2. திலீப்

3. சூரஜ் யாதவ்

4. சஞ்சய் தாக்கூர்

5. ரஜனீஷ்

6. தன்மய் கோஷ்

7. கூபமால்

8. குஞ்சு

9. சந்தோஷ் குமார்

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Secret Affairs: தகாத உறவுகள் அதிகம் உள்ள நகரங்கள்: தமிழகத்தின் 4 நகரங்களும் லிஸ்டில் இருக்கு
எழுத்து தேர்வு கிடையாது... நேர்காணல் மட்டும்..! RBI-ல் மாஸ் வேலைவாய்ப்பு! மாதம் ₹4.10 லட்சம் சம்பளம்