எல்லையை காக்கும் ராணுவ வீரர்களுக்கு தமிழகத்தில் இருந்து ராக்கி.. தளபதியை நெகிழவைத்த போர் நினைவு சகோதரிகள்.!

By vinoth kumarFirst Published Aug 22, 2021, 4:53 PM IST
Highlights

கரூர் பரணி கல்லூரி மாணவிகளின் கைவண்ணத்தில் உருவாக்கப்பட்ட 25,000 ராக்கிளை  போர் நினைவு சகோதரிகள் சாம்பவி மற்றும் தயார் வந்தனா பிஷ்ட் விஜய் ஆகியோர் முப்படை ராணுவ தளபதி பிபின் ராவத்திடம் ஒப்படைத்தனர்.
 

கரூர் பரணி கல்லூரி மாணவிகளின் கைவண்ணத்தில் உருவாக்கப்பட்ட 25,000 ராக்கிளை போர் நினைவு சகோதரிகள் சாம்பவி மற்றும் தாயார் வந்தனா பிஷ்ட் விஜய் ஆகியோர் முப்படை ராணுவ தளபதி பிபின் ராவத்திடம் ஒப்படைத்தனர்.

சகோதரத்துவத்தை விளக்கும் பண்டிகையாக வடமாநிலங்களில் ரக்‌ஷா பந்தன் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்துக்களின் காலண்டரில் ஷரவணா மாதத்தின் கடைசி நாளில் ரக்‌ஷா பந்தன் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் சகோதரிகள் தங்கள் சகோதரர்களுக்கு ராக்கி கயிறு கட்டி ஆசி பெறுவார்கள். சகோதரிகளை ஆசீர்வாதம் செய்யும் சகோதரர்கள் அவர்களுக்குப் பரிசுகள், பணம், நகை ஆகியவற்றை அன்பளிப்பாக வழங்குவது வழக்கமாகும்.

இந்நிலையில், நாட்டின் பாதுகாப்பு தளபதியின் தெற்கு தொகுதி அலுவலகம் இராணுவ அதிகாரித்தின் மிகப்பெரிய மையமாகும். இளம் ஷாம்பவி மற்றும் அவரது தாயார் வந்தனா பிஷ்ட் ஆகியோர் ரக்‌ஷாபந்தன் நாளில் ஒரு அற்புதமான அனுபவத்தை நிகழ்த்தியுள்ளனர். இருவரும் 25,000 ராக்கியை இந்தியாவின் துணிச்சலான வீரர்களிடம் ஒப்படைத்தனர். 

இதனை கரூரில் உள்ள பரணி கல்வி நிறுவனத்தின் முதல்வர் ராமசுப்ரமணியம் தலைமையில் அக்கல்லூரி மாணவிகளின் கைவண்ணத்தில் உருவாக்கப்பட்ட 25,000 ராக்கிகளை ஜெனரல் ராவத்திடம் ஷாம்பவி மற்றும் அவரது தாயார் வந்தனா பிஷ்ட் ஆகியோர் ஒப்படைத்துள்ளனர். 

இதனையடுத்து, பிபின் ராவத் கூறுகையில் நாட்டின் துணிச்சலான வீரர்கள் தங்கள் சகோதரிகளின் ஆசீர்வாதமாக இந்த ராக்கியை பெறுவதில் மகிழ்ச்சி அடைவார்கள் என்றும், எல்லை காவலர்களுக்கு இந்த ராக்கிக்கள் நிச்சயம் வழங்கப்படும் என்றும் உறுதி அளித்தார்.  ஒவ்வொரு ஆண்டும் இந்த ராக்கியை வந்தனா பிஷ்ட் மற்றும் ஷம்பவி ஆகியோர் போர் நினைவு டெராடூன் சார்பாக ராணுவ வீரர்களுக்கு அனுப்புகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

click me!