வக்ஃபு திருத்தச் சட்டம் அமலுக்கு வருவதற்கு முன்போ, பின்போ வக்ஃபுக்கு சொந்தமானது என அடையாளம் காணப்பட்ட அல்லது அறிவிக்கப்பட்ட எந்தவொரு அரசாங்க சொத்தும் இனி வக்ஃபு சொத்தாகக் கருதப்படாது என நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வக்ஃபு திருத்த மசோதாவின் விதிகளில் கூறபட்டுள்ளது.

வக்ஃபு திருத்த மசோதாவில் உள்ள பிரிவு 3C (1) கூறுகிறது, “இந்தச் சட்டம் தொடங்குவதற்கு முன்போ அல்லது அதற்குப் பின்னரோ, வக்ஃபு சொத்தாக அடையாளம் காணப்பட்ட அல்லது அறிவிக்கப்பட்ட எந்தவொரு அரசாங்க சொத்தும் வக்ஃபு சொத்தாகக் கருதப்படாது.”
சர்ச்சைக்குரிய வக்ஃபு (திருத்த) மசோதா, 2024, மக்களவையில் புதன்கிழமை விவாதத்திற்கு உள்ளாகி வருகிறது, இது அரசாங்கத்திற்கும் எதிர்க்கட்சிக்கும் இடையே மோதலைத் தூண்டியுள்ளது.
தொழில்நுட்பத்தை இணைத்து, சிக்கல்களை நிவர்த்தி செய்து, அதிக வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதன் மூலம் வக்ஃபு சொத்துக்களின் நிர்வாகத்தை மேம்படுத்துவதே இந்த மசோதாவின் நோக்கமாகும். மசோதாவை தாக்கல் செய்த மத்திய சிறுபான்மை விவகார அமைச்சர் கிரண் ரிஜிஜு, கூட்டு நாடாளுமன்றக் குழுவின் ஆலோசனை செயல்முறை, இந்தியாவின் ஜனநாயக வரலாற்றில் ஒரு நாடாளுமன்றக் குழுவால் இதுவரை மேற்கொள்ளப்பட்ட மிக விரிவான செயல்முறையாகும் என்பதை எடுத்துரைத்தார்.
மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா இந்த மசோதா மீதான விவாதத்திற்கு எட்டு மணி நேரம் ஒதுக்கியுள்ளார். சபையின் நடவடிக்கைகளின் அடிப்படையில் அதை நீட்டிக்க வாய்ப்பு உள்ளது.
வக்ஃபு சட்டத் திருத்த மசோதாவில் என்ன இருக்கிறது? அதன் வரலாறு என்ன?