இந்திய உற்பத்தி பொருட்கள் ஏற்றுமதியை 2027ல் $10 பில்லியனாக உயர்த்த வால்மார்ட் திட்டம்

By karthikeyan VFirst Published Dec 10, 2020, 9:09 PM IST
Highlights

இந்தியா உற்பத்தி மையமாக உருவெடுத்து உற்பத்தி துறையில் பெரியளவில் வளர்ந்துவிட்டதை ஒப்புக்கொள்ளும் விதமாக, வால்மார்ட், இந்தியாவிலிருந்து செய்யப்படும் ஏற்றுமதி மதிப்பை அடுத்த 7 ஆண்டுகளில் 7 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பளவிற்கு உயர்த்தி, 2027ல் 10 பில்லியன் அமெரிக்கன் டாலர் மதிப்பிற்கு ஏற்றுமதி செய்ய திட்டமிட்டுள்ளது.
 

வால்மார்ட்டின் புதிய ஏற்றுமதி திட்டம், இந்தியாவின் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களின் உற்பத்திகளுக்கு ஊக்கமளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஃப்ளிப்கார்ட் சமர்த் மற்றும் வால்மார்ட் விருத்தி சப்ளையர் மேம்பாட்டு திட்டங்கள் ஆகியவற்றுடன் புதிய ஏற்றுமதி திட்டம் இந்திய உற்பத்தி பொருட்களை ஏற்றுமதி செய்வதை மேலும் ஊக்கமளிக்கிறது. உணவு, மருந்துகள், ஆரோக்கியம் மற்றும் அழகு பொருட்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் ஆகிய இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் நூற்றுக்கணக்கான புதிய சப்ளையர்களுக்கு உதவுவதும், இந்த ஏற்றுமதி விரிவு திட்டத்தின் நோக்கம். 

ஒரு, சர்வதேச சில்லறை விற்பனை நிறுவனமாக வால்மார்ட், உலகளவிலான வாடிக்கையாளர்களுக்கு மதிப்பளிப்பதுடன், சர்வதேச சில்லறை வியாபாரத்தின் வெற்றியில், உள்ளூர்  தொழில் முனைவோர்கள், உற்பத்தியாளர்களின் பங்கு முக்கியமானது என்பதையும் இந்திய சப்ளையர்களின் ஆற்றலையும் உணர்ந்து, வால்மார்ட் நிறுவனம் இந்திய உற்பத்தி பொருட்களை ஏற்றுமதி செய்யும் அளவை வரும் ஆண்டுகளில் பலமடங்கு அதிகரிக்கவுள்ளதாக வால்மார்ட்டின் தலைவரும் சி.இ.ஓவுமான டௌக் மெக்மிலன் தெரிவித்துள்ளார்.

இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்வதை அதிகரிக்கும் விதமாக வால்மார்ட், இந்திய விநியோக சங்கிலியை வலுப்படுத்தவுள்ளது. ஏற்கனவே இருக்கும் ஏற்றுமதியாளர்களுடன், ஏற்றுமதி தயார் தொழில்களின் தொகுப்பை விரிவுபடுத்தவும் உள்ளது.

இந்தியாவில் உள்ள உள்ளூர் சப்ளையர்களுக்கு அவர்களின் செயல்பாடுகளை மேம்படுத்தவும் சர்வதேச தரங்களை பூர்த்தி செய்யவும், புதிய தயாரிப்புகளை உருவாக்கவும், பேக்கேஜிங், சந்தைப்படுத்தல், விநியோக சங்கிலி மேலாண்மை மற்றும் பலவற்றில் புதிய திறன்களை வளர்க்கவும் உதவிவரும் வால்மார்ட் நிறுவனம், இந்தியாவிலிருந்து ஏற்றுமதியை பலமடங்கு அதிகரிக்கும் நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது.

ஓராண்டுக்கு முன்பே தொடங்கப்பட்ட வால்மார்ட் சப்ளையர் மேம்பாட்டு திட்டமான விருத்தி என்ற திட்டம், சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு ஏற்றுமதி குறித்த அறிவையும் விழிப்புணர்வையும் கற்பித்தது. அதன்மூலம், சிறு, குறு தொழில் நிறுவனங்களின் உற்பத்தி பொருட்களை வால்மார்ட், ஃப்ளிப்கார்ட் மற்றும் மற்ற நிறுவனங்களின் மூலம் இந்தியாவில் மட்டுமல்லாது உலகம் முழுவதும் விற்பதற்கு சிறு, குறு தொழில் நிறுவனங்களை தயார்ப்படுத்தி, அதில் வெற்றியும் காணவைத்தது வால்மார்ட். அடுத்த ஐந்தாண்டுகளில் மேக் இன் இந்தியா திட்டத்தின் மூலம் . 50,000 சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு உள்நாட்டு மற்றும் சர்வதேச ஏற்றுமதி செய்ய அதிகாரமளிப்பதே, இந்த திட்டத்தின் நோக்கம்.

வால்மார்ட்டின் டாப் சோர்ஸிங் மார்கெட்டுகளில் இந்தியாவும் முக்கியமான நாடு. ஓராண்டுக்கு 3 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிற்கு இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் ஆடை, வீட்டு உபயோக பொருட்கள், நகைகள் மற்றும் மற்ற சில பொருட்களுக்கு அமெரிக்கா, கனடா, மெக்ஸிகோ, மத்திய அமெரிக்கா, பிரிட்டன் உட்பட 14 நாடுகளின் சந்தையில் வாடிக்கையாளர்கள் உள்ளனர். இந்நிலையில், அடுத்த 7 ஆண்டுகளில், இந்தியாவிலிருந்து செய்யப்படும் ஏற்றுமதியை மேலும் 7 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிற்கு உயர்த்தி, 2027ல் 10 பில்லியன் அமெரிக்க டாலராக உயர்த்த வால்மார்ட் இலக்கு நிர்ணயித்துள்ளது.
 

click me!