வோடஃபோன் வாடிக்கையாளர்களே உஷாராயிடுங்க… டிசம் 1-ம் தேதி காத்திருக்கு அதிர்ச்சி

By Selvanayagam PFirst Published Nov 18, 2019, 11:02 PM IST
Highlights

கடன் நெருக்கடியால் சிக்கித் தவிக்கும் வோடஃபோன் ஐடியா நிறுவனம் வரும் டிசம்பர் 1-ம் தேதி முதல் தன்னுடைய மொபைல் சர்வீஸ் ரேட் அனைத்தையும் உயர்த்தப்போவதாக அறிவத்துள்ளது.

ஆனால், எந்த அளவுக்கு மொபைல் சர்வீஸ் ரேட் உயர்த்தப் போகிறது என்பதுகுறித்து அந்த நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.

நடப்பு நிதியாண்டின் செப்டம்பர் மாதத்தோடு முடிந்த 2-வது காலாண்டில் வோடஃபோல் ஐடியா நிறுவனம் கார்ப்பரேட் நிறுவனங்களில் 2-வது மிகப்பெரிய இழபப்பைச் சந்தித்தது. வரி தொடர்பான வழக்கில் தொலைத்தொடர்புத் துறைக்கு செலுத்த  வேண்டிய நிலுவையை வோடஃபோன் நிறுவனம் செலுத்த  உச்ச நீதிமன்றத்தின் உத்தரவிட்டது. இதனால் வோடஃபோல் ஐடியா நிறுவனம் ஏறக்குறைய ரூ.50 ஆயிரத்து 921 கோடி இழப்பைச் சந்தித்தது.

இந்நிலையில் தொடர்ந்து இந்தியாவில் தனது வர்த்தகத்தை தொடர வேண்டுமானால், அரசிடம் இருந்து ஏதேனும் சலுகையும், நீதிமன்றத்திடம் இருந்து ஏதேனும் சாதகமான உத்தரவுகளைம் எதிர்பார்த்துள்ளது.

இந்நிலையில் நிறுவனத்துக்கு ஏற்பட்ட இழப்பையும், பணநெருக்கடியையும் வாடிககையாளர்கள் மேல் சுமத்த வோடஃபோன் ஐடியா நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக வோடஃபோன் ஐடியா நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பில், “ வோடஃபோன் ஐடியா நிறுவனம் மிகுந்த நிதிநெருக்கடியில் சிக்கி இருப்பதில் அதில் இருந்து விடுபடுவதற்கு மொபைல் சர்வீஸ் கட்டணத்தை உயர்த்த வேண்டிய தேவை இருக்கிறது.

ஆதலால் டிசம்பர் –1-ம் தேதியி்ல இருந்து மொபைல் சர்வீஸ் கட்டணம் உயர்த்தப்படுகிறது. வாடிக்கையாளர்களுக்கு வழக்கம் போல் டிஜிட்டல் ரீதியான சேவை உறுதிசெய்யப்படும்” எனத் தெரிவித்துள்ளது

இதனால், வோடஃபோன் ஐடியா நிறுவனத்தின் போஸ்ட் பெய்ட் மற்றும் ப்ரீ பெய்ட் வாடிக்கையாளர்கள் டிசம்பர்மாதம் கட்டண உயர்வை எதிர்பார்க்கலாம்.

click me!