வரலாறு படைத்த மாநிலங்களவை: வெங்கையா நாயுடு புத்தகம் வெளியிட்டு புகழாரம்..!

By Asianet TamilFirst Published Nov 18, 2019, 4:15 PM IST
Highlights

நாடாளுமன்றத்தில் இன்று வரலாற்று சிறப்பு மிக்க மாநிலங்களவையின் 250வது அமர்வு தொடங்குகிறது. இதனை சிறப்புவிக்கும் விதமாக நேற்று மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு புத்தகத்தை வெளியிட்டார்.

நம் நாட்டில் 1952 மே முதல் நாடாளுமன்றத்தின் மாநிலங்களவை கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இன்று மாநிலங்களவையின் 250வது அமர்வு தொடங்குகிறது. இதனை கொண்டாடும் விதமாக நேற்று ஒரு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட மாநிலங்களவை தலைவரும், துணை குடியரசு தலைவருமான வெங்கையா நாயுடு, இதுவரை மாநிலங்களவையில் நடைபெற்ற நிகழ்வுகள் குறித்த 118 பக்கங்கள் மற்றும் 29 பிரிவுகள் கொண்ட புத்தகத்தை வெளியிட்டார்.


1952ம் ஆண்டு முதல் இதுவரை 249 மாநிலங்களவை அமர்வு நடைபெற்றுள்ளது. 249 அமர்வுகளில் 3,817 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அதேசமயம் பல்வேறு கால கட்டங்களில் மாநிலங்களவை கலைக்கப்பட்டதால் 60 மசோதாக்கள் காலாவதியாக விட்டன.  முதல் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்ற 1952ம் ஆண்டு முதல்  3,818 நாடாளுமன்ற சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன.


மாநிலங்களவையின் 250வது அமர்வை கொண்டாடும் வகையில் இன்று அவையின் இரண்டாவது பாதியில் இந்திய அரசியலில் மாநிலங்களவையின் பங்கு, சீர்திருத்தம் தேவை தலைப்புகளில் தலைவர்கள் ஆலோசனை மேற்கொள்ள உள்ளனர். மேலும் மாநிலங்களவையின் பரிமாண வளர்ச்சி குறித்த நினைவு தொகுதியாக, ரூ.250 சில்வர் காயின் மற்றும் ரூ.5 அஞ்சல் தலையும் வெளியிடப்படப்பட உள்ளது.

click me!