ஆஹா! என்ன ஒரு யோசனை.. குழந்தைகளுக்கு முதலில் இவற்றை கற்றுக் கொடுங்கள்.. வைரலாகிய ஆனந்த் மஹிந்திராவின் பதிவு!

By Kalai SelviFirst Published Jan 12, 2024, 4:41 PM IST
Highlights

சமூக வலைதளங்களில் அவ்வப்போது ஆக்டிவாக இருக்கும் மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா மீண்டும் வைரலாகி வருகிறார். அது என்னவென்று குறித்து இங்கு பார்க்கலாம்.

சமூக வலைதளங்களில் அவ்வப்போது ஆக்டிவாக இருக்கும் மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா மீண்டும் வைரலாகி வருகிறார். அவர் தனது ட்விட்டரில், மாணவர்கள் தொடர்பான வீடியோவை ட்வீட் செய்துள்ளார். சிறுவயதிலேயே குழந்தைகளுக்கு சுகாதாரம் மற்றும் ஒத்துழைப்பைக் கற்றுக்கொடுப்பது எப்படி என்பது பற்றியது இந்த வீடியோ. மேலும், முன் தொடக்க மற்றும் தொடக்கப் பள்ளிகள் இந்தக் கொள்கையைப் பின்பற்றுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். 

ஆனந்த் மஹிந்திரா பகிர்ந்துள்ள அந்த வீடியோவில், ஒரு ஆசிரியர் பல்வேறு வகையான பொம்மைகளை தரையில் எறிவதையும், வரிசையாக போடப்பட்டிருந்த மேஜைகளை ஆங்காங்கே போடுவதையும் காணலாம். அதன் பிறகு அனைத்து மாணவர்களையும் வகுப்பறைக்குள் அழைத்து வந்தாள். அவர்கள் உடனே உஷாராகி..வகுப்பறையை சரிபார்த்து உடனே சுத்தம் செய்யத் தொடங்குகிறார்கள். பொம்மைகளை எடுத்து ஒரு பெட்டியில் அடுக்கி வைப்பதைக் காணலாம். மேஜைகளையும் முன்பு இருந்தபடியே வைக்கத்தனர்.

Latest Videos

இதையும் படிங்க: 700 ரூபாய்க்கு கார் ஆர்டர் செய்த சின்னப் பையன்! வைரலான ஆனந்த் மஹிந்திரா ரியாக்‌சன்!

 

What an idea…
This is how to embed cleanliness & tidiness & collaboration in our basic nature.
Can we make this practice a standard part of pre and elementary schools?? pic.twitter.com/APeVw4AKWL

— anand mahindra (@anandmahindra)


தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோ ஜனவரி 7ஆம் தேதி பகிரப்பட்டது. வீடியோ வெளியிடப்பட்டதில் இருந்து 5 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது. ஆயிரக்கணக்கான லைக்குகள் வருகின்றன. "ஐடியா நன்றாக இருக்கிறது, ஆனால் இதுபோன்ற விஷயங்களை முதலில் பள்ளிகளில் விட வீட்டில் கற்பிக்க வேண்டும்." “இது ஒரு அருமையான யோசனை, கல்வியின் ஒரு பகுதியாக இதுபோன்ற வேலைகள் கண்டிப்பாக செய்யப்பட வேண்டும் என்று நெட்டிசன்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

click me!