மத்தியப் பிரதேச மாநிலம் பன்னா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் ஆழம் குறைந்த சுரங்கத்தில் சுமார் 10 லட்சம் ரூபாய் மதிப்புடைய வைரத்தைக் கண்டுபிடித்தத சம்பவம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலம் பன்னா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் ஆழம் குறைந்த சுரங்கத்தில் சுமார் 10 லட்சம் ரூபாய் மதிப்புடைய வைரத்தைக் கண்டுபிடித்தத சம்பவம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. மத்தியப் பிரதேச மாநிலம் பன்னா மாவட்டத்தில் சமேலி பாய் என்ற இல்லத்தரசி, கிருஷ்ணா கல்யாண்பூர் பட்டி பகுதியில் தனது கணவர் குத்தகைக்கு எடுத்திருந்த சுரங்கத்தில் வேலை செய்துக்கொண்டிருந்தார். அப்போது சுரங்கத்தில் வேலை பார்த்துக்கொண்டிருந்தார். அப்போது அந்த பெண்ணுக்கு அங்கு வைரம் ஒன்று கிடைத்துள்ளது. அது தரமாக இருந்ததாக கூறப்படுகிறது.
மேலும் அந்த வைரக்கல், ஏலத்தில் 10 லட்சம் ரூபாய் வரை விலை போகலாம் என்றும் கூறப்படுகிறது. இதுக்குறித்து பேசிய சமேலி பாயின் கணவர் அரவிந்த் சிங், வைர சுரங்கத்தில் தங்கள் அதிர்ஷ்டத்தை சோதித்து பார்க்க முடிவு செய்ததாகவும், இந்த ஆண்டு மார்ச் மாதம் கிருஷ்ணா கல்யாண்பூர் பட்டி பகுதியில் ஒரு சிறிய சுரங்கத்தை குத்தகைக்கு எடுத்ததாகவும் கூறினார். மேலும் கிடைத்த வைரத்திற்கு ஏலத்தில் நல்ல விலை கிடைத்தால் பன்னா நகரில் வீடு வாங்க விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.
அந்த வைரம் 2.08 காரட் என்று பன்னாவின் வைர அலுவலக அதிகாரி அனுபம் சிங் தெரிவித்தார். மேலும் சமேலி பாயி நேற்று வைர அலுவலகத்தில் விலைமதிப்பற்ற கல்லை டெபாசிட் செய்ததாகவும் அதிகாரி ஒருவர் கூறினார். இதனிடையே வரவிருக்கும் ஏலத்தில் வைரம் விற்பனைக்கு வைக்கப்படும், மேலும் அரசாங்க வழிகாட்டுதல்களின்படி விலை நிர்ணயிக்கப்படும், அரசாங்கத்தின் ராயல்டி மற்றும் வரிகள் கழித்த பிறகு வருமானம் பெண்ணுக்கு வழங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். பன்னா மாவட்டத்தில் 12 லட்சம் காரட் வைர இருப்பு இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.