முக்கிய கட்டத்தை எட்டிய சந்திராயன் 2 - சவாலான பணியை வெற்றிகரமாக முடித்த இஸ்ரோ!!

By Asianet TamilFirst Published Sep 2, 2019, 2:45 PM IST
Highlights

நிலவை சுற்றி வரும் சந்திராயன் 2 விண்கலத்தின் ஆர்பிட்டரிலிருந்து 'விக்ரம்' லேண்டர் வெற்றிகரமாக பிரிக்கப்பட்டுள்ளது.

நிலவை ஆய்வு செய்வதற்காக கடந்த ஜூலை 22 ம் தேதி சந்திராயன் 2 விண்கலம் ஸ்ரீ ஹரிகோட்டாவில் இருந்து செலுத்தப்பட்டது. கடந்த ஆகஸ்ட் 14 ம் தேதியில் இருந்து நிலவின் சுற்றுவட்டப்பாதையை நோக்கி பயணிக்க தொடங்கியது.

கடந்த 20 ம் தேதி காலை  சரியாக 9 .30 மணியளவில் நிலவின் வட்டப்பாதையை வெற்றிகரமாக அடைந்தது . நிலவின் சுற்றுவட்டப்  பாதையை சுற்றி வந்த சந்திராயன் 2 விண்கலதின் வேகம் குறைக்கப்பட்டு அதன் பாதை படிப்படியாக மாற்றப்பட்டு கொண்டிருந்தது.

இந்த நிலையில் நேற்று மீண்டும் ஒரு சவாலான செயலை இஸ்ரோ விஞ்ஞானிகள் செய்திருக்கிறார்கள். சந்திராயன் விண்கலத்தின் பாதை நேற்று மாலை  மாற்றப்பட்டது. நிலவில் இருந்து சுமார் 119 கிலோமீட்டரில் இருந்து 127 கிலோமீட்டருக்குள் இருக்கும் சுற்றுவட்ட பாதைக்குள் சந்திராயன் விண்கலம் செலுத்தப்பட்டிருக்கிறது. இந்த நடவடிக்கை சுமார் 52 வினாடிகள் நீடித்ததாக இஸ்ரோ சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று பிற்பகல் ஆர்பிட்டரில் இருந்து "விக்ரம்" லேண்டர் பிரிக்கும் பணியை இஸ்ரோ விஞ்ஞானிகள் தொடங்கினர். அதன் படி விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக பிரிக்கப்பட்டுள்ளது.

நாளை காலை 9 மணியில் இருந்து 10 மணிக்குள் விக்ரம் லேண்டர் தரையிறங்க செயல்படுத்தப்பட வேண்டிய இரண்டு முக்கியமான பணிகள் நடைபெற இருப்பதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்த பணியானது மீண்டும் 4 ம் தேதி காலை 3 மணியில் இருந்து 4 மணி வரை மேற்கொள்ளப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

click me!