''மோடியை தெறிக்க விடும் இன்டர்நேஷனல் கேடி'': பிரதமருக்கே ட்விஸ்ட் வைக்கும் ட்விட்!

 
Published : Jun 06, 2017, 05:55 PM ISTUpdated : Sep 19, 2018, 12:43 AM IST
''மோடியை தெறிக்க விடும் இன்டர்நேஷனல் கேடி'': பிரதமருக்கே ட்விஸ்ட் வைக்கும் ட்விட்!

சுருக்கம்

Vijay Mallaya Says Wide sensational media coverage on my attendance at the IND v PAK

சோஷியல் மீடியாவை பயன்படுத்தி தேச மக்களுக்கு சுளுக்கெடுப்பதில் மோடியை விட கில்லாடி வேறு யாரும் கிடையாது. ராத்திரி பத்து பத்தரை மணிக்கு மேலே ‘ஏ ராக்கோழி கூவயில, என் ராசாத்தி நீயுமில்ல’ன்னு டி.ஆர்.ரின் கில்மா பாட்டு கேட்கலாம் என்று நினைத்து ரேடியோவை ஆன் செய்தால் ‘மேரீ தேஸ் கீ லோகோன். மேம் நரேந்திர மோடி போல் ரஹாஹூம். இஸீ தரக் ஆப் கே ஸாத் சமஜ்னே கே லியே’ என்று ’மன் கி பாத்’ நிகழ்ச்சியில்  பேசித்தள்ளி பேஸ்தடிக்க வைப்பார் மோடி. 

ஏதோ ராஜீவ்காந்தி போல் பஞ்சாயத்து ராஜ் விஷயங்களை பக்கம் பக்கமாக பேசுவார் என்று பார்த்தால், மனிதர்  ‘ஏலே உன்னோட பாக்கெட்ல உள்ள ஆயிரம் ரூவாயும், ஐநூறு ரூவாயும் இனி செல்லாதுலே.’ என்று தேசத்தையே தெறிக்க விடும் அறிவிப்புக்களை வெளியிடுவார். 

ரேடியோவில்தான் இந்த மனிதரின் ரவுசு தாங்க முடியல என்று ட்விட்டர் பக்கம் போனால் அங்கேயும் உட்கார்ந்திருக்கிறார் நமோ. விளாடிமிர் புடினின் விலா எலும்போடு கைகோர்த்தபடி செல்ஃபி எடுத்துப் போட்டு சீன அதிபருக்கு சீதபேதி வரவைப்பார். 

இப்படி ரகளையாக அட்ராசிட்டி செய்து கொண்டிருக்கும் மோடியையே தெறிக்கவிட்டிருக்கிறார் ஒரு இன்டர்நேஷனல் கேடி. வேறு யாரு, ஒன் அண்டு ஒன்லி மல்லையாதான். 

இந்தியாவில் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் அனைத்திலும் கடனை வாங்கி அதை திருப்பித்தராமல் அவர்களை தெருவில் விட்டுவிட்டு இங்கிலாந்துக்கு எஸ்கேப்  ஆன மல்லையாவை மடக்கிப்பிடிக்க மங்கலாபாளையம் போலீஸில் இருந்து இண்டர்போல் போலீஸ் வரை மாளாத முயற்சி செய்தார்கள். மோடி நிச்சயம் மல்லையாவை மடக்கி பிடித்து இந்தியாவுக்கு இழுத்து வருவார் என்று கார்டூனெல்லாம் போட்டு கெத்து காட்டியது பி.ஜே.பி. ஆனாலும் ஏமாற்றமே மிஞ்சியிருக்கிறது. 

இந்நிலையில் இங்கிலாந்தில் நடந்து வரும் ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியாவும், பாகிஸ்தானும் மோதும் செம சென்ஷேனல் போட்டி கடந்த ஞாயிறன்று நடந்தது. வெல்லப்போவது இந்தியாவா அல்லது பாகிஸ்தானா என்று மீடியாக்கள் தீ பிடிக்கும் வகையில் அலசுவார்கள் என்று பார்த்தால் அவர்களின் திக்கே திசைமாறி போனது. கிரவுண்டை விட்டுவிட்டு கேலரியை அடிக்கடி போகஸ் செய்தன மீடியாவின் கேமெராக்கள். காரணம், இந்தியாவில் அதிரிபுதிரியாக தேடப்படும் மல்லையா அந்த கேலரியில் உட்கார்ந்திருந்ததுதான். 

இந்தியாவில் பல்லாயிரம் கோடிகளை சீட் செய்துவிட்டு இங்கிலாந்தில் செம தில்லாக உட்கார்ந்து மல்லையா கிரிக்கெட் போட்டியை ரசிப்பதை பார்த்து தேசத்துக்கே ரத்தம் கொதித்திருக்கிறது. அதிலும் இந்தியாவின் முன்னாள் மாஸ்டர் பேட்ஸ்மேனான சுனில் கவாஸ்கர் மல்லையாவுடன் நின்று கொண்டிருப்பது போல் வந்திருக்கும் போட்டோ கவாஸ்கரை நோக்கி தரைரேட் விமர்சன யாக்கர்களை வீச செய்திருக்கிறது இந்தியர்களை.

இவ்வளவு சென்சேஷனுக்கு மத்தியில் மல்லையா செம கூலாக ஒரு ட்விட்டை போட்டு மோடியை வெறிக்க விட்டுள்ளார். அதில் ‘இந்தியா - பாகிஸ்தான் மேட்சை பார்க்க நான் கலந்து கொண்டதை மிக சென்ஷேனலாக  மீடியாக்கள் கவர் செய்துள்ளனர். இனி இந்தியா கலந்து கொள்ளும் எல்லா மேட்சிலும் நான் கலந்து கொண்டு அவர்களை உற்சாகப்படுத்த முடிவு செய்துள்ளேன்.’ என்று கூறியுள்ளார். 

இது இந்தியர்களை வெறித்தனமாக உசுப்பேற்றியுள்ளது. அதிலும் காங்கிரஸ் ‘உலகம் சுற்றும் மோடியே தில் இருந்தால் இந்தியா கலந்து கொள்ளும் அடுத்த ஆட்டத்தில் கலந்து கொண்டு மல்லையாவை கைது செய்யுங்கள் பார்க்கலாம்!” என்று மிக கடுமையான சவாலை வைத்திருக்கிறது.
என்ன செய்ய போகிறார் உலகம் சுற்றும் மோடி!
 

PREV
click me!

Recommended Stories

இந்திய வீரர்களுக்கு 'அந்த' பழக்கவழக்கம்! எனது கணவர் ஒழுக்கமானவர்.. ஜடேஜா மனைவி பகீர் குற்றச்சாட்டு!
பாகிஸ்தானின் டுபாக்கூர்தனம்..! ஏஐ டீப்ஃபேக் வீடியோக்கள் மூலம் போலியாக போரை உருவாக்கிய கடற்படை..!