கால்நடை மருத்துவர் கடத்தி துப்பாக்கி முனையில் கட்டாய திருமணம்.. அழுது கொண்டே தாலி கட்டிய பரிதாபம்..!

By vinoth kumarFirst Published Jun 16, 2022, 9:01 AM IST
Highlights

பீகாரில் கால்நடை மருத்துவர் கடத்தப்பட்டு துப்பாக்கி முனையில் அவருக்கு கட்டாய திருமணம் செய்து வைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

பீகாரில் கால்நடை மருத்துவர் கடத்தப்பட்டு துப்பாக்கி முனையில் அவருக்கு கட்டாய திருமணம் செய்து வைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கால்நடை மருத்துவர்

பீகார் மாநிலத்தின் பெகுசராய் மாவட்டத்தில் பசு மாடு ஒன்றுக்கு உடல்நிலை சரியில்லை என கூறி கால்நடை மருத்துவராக பணிபுரியும் சத்யம் குமார் ஜாவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, மருத்துவம் பார்க்க சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளார். அப்போது, மருத்துவரை கடத்தி துப்பாக்கி முனையில் கட்டாய திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ளது.

கட்டாய திருமணம்

இதுகுறித்து மணமகனின் தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதில், எனது மகனை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதனையடுத்து, மறுநாள் காலையில்  எனது செல்போனுக்கு ஒரு வீடியோ ஒன்று வந்தது. அதில் எனது மகன் மணக்கோலத்தில் உட்கார வைக்கப்பட்டு ஒரு பெண்ணுடன் கட்டாய திருமணம் நடைபெற்றுள்ளது. இதை பார்த்தவுடன் அதிர்ச்சி ஏற்பட்டது. அவனுக்கு கட்டாய திருமணம் செய்து வைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்'என கூறியுள்ளார்.

தந்தை புகார்

இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து உரிய விசாரணை நடத்தப்பட்டு, தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்துள்ளனர். பீகார், ஜார்கண்ட் மற்றும் உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் கட்டாய திருமணம் தொடர்ந்து நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. இதனை 'ஜாப்ரிய விவாஹா' என கூறுகின்றனர்.

click me!