துணை குடியரசு தலைவருக்கான பாஜக வேட்பாளர் பெயர் அறிவிப்பு...

 
Published : Jul 17, 2017, 07:37 PM ISTUpdated : Sep 19, 2018, 12:53 AM IST
துணை குடியரசு தலைவருக்கான பாஜக வேட்பாளர் பெயர் அறிவிப்பு...

சுருக்கம்

Venkaiah Naidu is the BJPs vice presidential candidate.

பாஜக துணை குடியரசு தலைவர் வேட்பாளராக வெங்கையா நாயுடு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

துணை ஜனாதிபதியாக உள்ள ஹமீது அன்சாரியின் பதவிகாலம் அடுத்த மாதத்துடன் முடிவடைகிறது.

இதனால் அடுத்த துணை ஜனாதிபதியின் தேர்தல் ஆகஸ்ட் 5 ஆம் தேதி நடைபெற உள்ளது.  இதையடுத்து எதிர்கட்சிகளின் சார்பில் காந்தியின் பேரனாகிய கோபால கிருஷ்ண காந்தியை வேட்பாளராக காங்கிரஸ் தலைமை நிறுத்தியுள்ளது.

இதைதொடர்ந்து திமுகவிடமும் அதிமுகவிடமும் கோபால கிருஷ்ண காந்தி ஆதரவு கோரியுள்ளார்.

மேலும், துணை ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பு மனுவை நாளை கோபால கிருஷ்ண காந்தி  தாக்கல் செய்ய உள்ளார்.

இந்நிலையில் பாஜகவின் ஆட்சிமன்ற குழு கூட்டன் இன்று நடைபெற்றது. இதில் பாஜக துணை குடியரசு தலைவர் வேட்பாளராக வெங்கையா நாயுடு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

PREV
click me!

Recommended Stories

தொழில்நுட்ப கோளாறு.. அவசரமாக தரையிறங்கிய போது விமானத்தின் டயர் வெடிப்பு.. அலறி கூச்சலிட்ட 160 பயணிகளின் நிலை என்ன?
நள்ளிரவு வரை தொடர்ந்த தர்ணா.. நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட VB-G RAM G மசோதா