புதிய குடியரசு துணைத் தலைவரானார் வெங்கய்யா நாயுடு!!!

First Published Aug 11, 2017, 10:25 AM IST
Highlights
venkaiah naidu became vice president of india


இந்தியாவின்  13வது துணை ஜனாதிபதியாக, வெங்கையா நாயுடு இன்று பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவி பிரமாணம் செய்து வைக்கிறார். 

ஜுலை 25 ஆம் தேதி ராம்நாத் கோவிந்த் இந்தியாவின் ஜனாதிபதியாக பொறுப்பேற்றுக் கொண்டார். இதனைத் தொடர்ந்து 12வது துணை ஜனாதிபதியாக பதவி வகித்து வந்த, ஹமீது அன்சாரியின் பதவிக்காலம், நேற்றுடன் முடிவடைந்தது.

இதற்காக நடைபெற்ற தேர்தலில் பாஜக வேட்பாளர் வெங்கய்யா நாயுடு வெற்றி பெற்றார். இந்நிலையில் நாட்டின், 13வது துணை ஜனாதிபதியாக, வெங்கையா நாயுடு, இன்று பதவி ஏற்றுக் கொண்டார்.

முன்னதாக வெங்கய்யா நாயுடு தனது இல்லத்தில் குடியரசுத் தலைவர் மாளிகைக்கு வருகை தந்தார். அங்குள்ள தர்பார் மண்டபத்தில் பதவி ஏற்பு விழா நடைபெற்றது.

விழா மண்டபத்துக்கு வருகை தந்த குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், வெங்கய்யா நாயுடுவுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

இந்திய அரசியல் அமைப்புச் சட்டப்படி வெங்கய்யா நாயுடு இன்று 13ஆவது குடியரசு துணைத் தவைராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, அமித்ஷா, ஸ்மிருதி ராணி மற்றும் ஏராளமான மத்திய அமைச்சர்கள் பங்கேற்றனர். தமிழகத்தின் சார்பில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

click me!