அஜித் படம் வெளியான தியேட்டர் முன்பு கலாட்டா பண்ணும் வாட்டாள் நாகராஜ்! பெங்களூரில் பரபரப்பு

Published : Sep 02, 2018, 06:23 PM ISTUpdated : Sep 09, 2018, 07:24 PM IST
அஜித் படம் வெளியான தியேட்டர் முன்பு கலாட்டா  பண்ணும் வாட்டாள் நாகராஜ்! பெங்களூரில் பரபரப்பு

சுருக்கம்

அஜித்தின் நடிப்பில் வெளியான ‘விவேகம்’படத்தின் கன்னட டப்பிங் படமான ‘கமாண்டோ’ வெளியான தியேட்டர் முன்பாக  கன்னட சலுவாளி அமைப்பின் தலைவரான வாட்டாள் நாகராஜ் கலாட்ட செய்து வருகிறார்.

அஜித்தின் நடிப்பில் வெளியான ‘விவேகம்’படத்தின் கன்னட டப்பிங் படமான ‘கமாண்டோ’ வெளியான தியேட்டர் முன்பாக kannada சலுவாளி அமைப்பின் தலைவரான வாட்டாள் நாகராஜ் கலாட்ட செய்து வருகிறார். அங்குள்ள ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. 

நடிகர் அஜித், சிறுத்தை சிவா இயக்கத்தில் நடித்து கடந்த ஆண்டு வெளியான ஆக்சன் திரைப்படம் ‘விவேகம்’. இப்படத்தில் அஜித்துடன் காஜல் அகர்வால், விவேக் ஒபராய், அக்ஷராஹாசன், கருணாகரன் உள்ளிட்ட நடிகர்களும் நடித்திருந்தனர். 

மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் வெளியாகி இப்படம், தமிழ் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெறாததால், மிகப்பெரிய அளவில் தோல்வியடைந்தது. இதனால், அஜித்தும், இயக்குநர் சிவாவும் நஷ்டத்தை ஈடுசெய்யும் விதமாக, விவேகம் படத்தை தயாரித்த சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிப்பிலேயே, விஸ்வாசம் என்ற படத்தை உருவாக்கி வருகின்றனர். 

இந்நிலையில், விவேகம் படம் கன்னடத்தில் ‘கமாண்டோ’ என்ற பெயரில், டப் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. இப்படம் கன்னட ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருவதாக, தற்போது தகவல் வெலியாகி உள்ளது. அதிலும், பூமிகா என்ற முக்கியமான தியேட்டரில் வார இறுதிகாட்சிகள் 2 இலிருந்து 5 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேலும், இப்படம் திரையிடப்படும் தியேட்டர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. இந்தச் செய்தியால் அஜித் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில்  இருந்தனர் இந்த சமயத்தில் கர்நாடகாவின் தலைநகரான பெங்களூரில் உள்ள பூமிகா என்ற திரையரங்கின் முன்பாக  வாட்டாள் நாகராஜன் தலைமையில் கூடிய கன்னட சலுவாளி அமைப்பினர் படத்தை  ஒளிபரப்ப கூடாது என கலாட்டாவில் ஈடுபட்டனர். 

PREV
click me!

Recommended Stories

தூக்கத்தில் மலம் கழித்த 3 வயது குழந்தை கொலை.. தாயின் கள்ளக்காதலன் வெறிச்செயல்!
ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் இஸ்லாமியர்களுக்கு எதிரானவர்கள் அல்ல..! மோகன் பகவத் நெகிழ்ச்சி பேச்சு!