சட்டப்பேரவை கலைப்பு? முன்கூட்டியே தேர்தலை சந்திக்க முதல்வர் அதிரடி திட்டம்!

By vinoth kumarFirst Published Sep 2, 2018, 11:39 AM IST
Highlights

தெலுங்கானாவில் முன்கூட்டியே சட்டப்பேரவை தேர்தலை நடத்த அம்மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் திட்டமிட்டுள்ளார். ஆகையால் இன்று மாலை சட்டப்பேரவை கலைப்பு அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

தெலுங்கானாவில் முன்கூட்டியே சட்டப்பேரவை தேர்தலை நடத்த அம்மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் திட்டமிட்டுள்ளார். ஆகையால் இன்று மாலை சட்டப்பேரவை கலைப்பு அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. 

ஆந்திராவில் இருந்து தெலங்கானா மாநிலம் கடந்த 2014-ம் ஆண்டு ஜூன் 2-ம் தேதி பிரிக்கப்பட்டது. இதையடுத்து, நாட்டின் 29-வது மாநிலமாக தெலங்கானா உதயமானது. இதன் முதல் முதல்வராக தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியின் தலைவர் சந்திரசேகர ராவ் பொறுப்பேற்றார். இவர் 4 ஆண்டு ஆட்சியை நிறைவு செய்துள்ளார். இந்நிலையில் நான்கு ஆண்டு சாதனைகள் விளக்க பொதுக்கூட்டம் ரங்கா ரெட்டி மாவட்டத்தில் இன்று நடைபெறுகிறது.

தெலங்கானாவின் அடுத்த சட்டப்பேரவை தேர்தல், மக்களவை தேர்தலுடன் சேர்ந்து நடைபெற இருந்தது. சில காரணங்களுக்காக மக்களவை தேர்தலுடன், மாநில சட்டப்பேரவை தேர்தலை சந்திக்க முதல்வர் சந்திரசேகர ராவ் விரும்பவில்லை. மக்களிடையே ஆளும் கட்சி மீது நல்ல எண்ணம் உள்ளதால், இந்த நேரத்தில் சட்டப்பேரவை தேர்தலை நடத்தி வெற்றி பெற சந்திர சேகர ராவ் விரும்புவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இந்நிலையில் மாநில சட்டப்பேரவை முன்கூட்டியே கலைப்பது குறித்து, கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளார். இன்று மதியம் நடக்கும் அமைச்சரவை கூட்டத்திற்கு பின் மாலையில் நடக்கும் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில், சட்டப்பேரவை கலைப்பு குறித்த அறிவிப்பை, ராவ் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

click me!