சத்தீஸ்கர் முதலமைச்சருக்கு தடை போட்ட யோகி ஆதித்யநாத்…. உத்தரப்பிரதேசத்தில் உச்சக்கட்ட டென்ஷன்….!

By manimegalai aFirst Published Oct 4, 2021, 11:10 AM IST
Highlights

சத்தீஸ்கர் முதலமைச்சர் வரும் விமானத்தை தரையிறங்க அனுமதிக்கக் கூடாது லக்னோ விமான நிலையத்திற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சத்தீஸ்கர் முதலமைச்சர் வரும் விமானத்தை தரையிறங்க அனுமதிக்கக் கூடாது லக்னோ விமான நிலையத்திற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 

உத்தரப்பிரதேசத்தில் போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது பாஜக அமைச்சர் மகனின் கோர் மோதில் இரண்டு விவசாயிகள் உயிரிழந்தது பதற்றத்தை ஏற்படுத்தியது. தொடர்ந்து விவசாயிகள் போராட்டம் வன்முறையாக மாறியதால் பாஜக தொண்டர்களும் அடித்து கொல்லப்பட்டனர். உச்சக்கட்ட பதற்றம் நீடிக்கும் உத்தரப்பிரதேசத்தில் கொல்லப்பட்ட விவசாயிகள் குடும்பத்திற்கு ஆறுதல் கூறச்செண்ற பிரியங்கா காந்தி அதிரடியாக கைது செய்யப்பட்டார்.

இதனிடையே பாதிக்கப்பட்ட விவசாயிகள் குடும்பத்தை சந்திக்க நேரில் வருவதாக காங்கிரஸ் மூத்த தலைவரும், சத்தீஸ்கார் முதலமைச்சர் பூபேஷ் பக்ஹல் அறிவித்துள்ளார். அதேபோல், வன்முறை நடைபெற்ற பகுதியை நேரில் பார்வையிட உள்ளதாக பஞ்சாப் துணை முதலமைச்சர் சக்ஜீந்தர் ரந்தவாலாவும் கூறியுள்ளார். இந்தநிலையில், சத்தீஸ்கார் முதலமைச்சர் பூபேஷ் பக்ஹல் மற்றும் பஞ்சாப் துணை முதலமைச்சர் சக்ஜீந்தர் ரந்தவாலா ஆகியோரை உத்தரபிரதேசத்திற்குள் நுழைய அனுமதிக்கக்கூடாது என லக்னோ விமான நிலைய அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

விமானம் மூலம் பூபேஷ் பக்ஹல் ம்ற்றும் சக்ஜீந்தர் ரந்தவாலா உத்தரபிரதேசம் வர திட்டமிட்டிருந்த நிலையில் இவர்கள் இருவரையும் லக்னோ விமான நிலையத்தில் தரையிறங்க அனுமதிக்கக்கூடாது என விமான நிலைய அதிகாரிகளுக்கு உத்தரபிரதேச கூடுதல் தலைமை செயலாளர் உத்தரவிட்டுள்ளார். இதனால் உத்தரப்பிரதேசத்தில் உச்சக்கட்ட பதற்றம் நீடிக்கிறது.

click me!