மகனை அங்கன்வாடி மையத்தில் சேர்த்த கலெக்டர் தம்பதி...! குவியும் பாராட்டு

By vinoth kumarFirst Published Nov 3, 2018, 2:15 PM IST
Highlights

உத்தரகண்ட் மாநிலம், சமோலி மாவட்ட கலெக்டர், தன், 2 வயது மகனை, தனியார் மழலையர் பள்ளியில் சேர்க்காமல், அரசு அங்கன்வாடி மையத்தில் சேர்த்துள்ளார்.

உத்தரகண்ட் மாநிலம், சமோலி மாவட்ட கலெக்டர், தன், 2 வயது மகனை, தனியார் மழலையர் பள்ளியில் சேர்க்காமல், அரசு அங்கன்வாடி மையத்தில் சேர்த்துள்ளார்.

 

உத்தரகண்ட் மாநிலம் சமோலி மாவட்ட கலெக்டராக இருப்பவர் ஸ்வாதி. இவரது கணவர், நிதின் பதோரியா, அல்மோரா மாவட்ட கலெக்டராக உள்ளார். இவர்களது மகன் அங்பயுதயை (3). தற்போதுள்ள நிலையில், ஏழை குடும்பத்தை சேர்ந்த பலரும், தங்களது குழந்தைகளை தனியார் பள்ளிகளிலேயே சேர்க்க விரும்புகிறார்கள். வசதி படைத்தவர்கள் சிபிஎஸ்இ பள்ளியில் சேர்க்கின்றனர். 

இந்நிலையில், கலெக்டர் தம்பதிகள், தங்களது பிள்ளையை அரசு அங்கன்வாடி மையத்தில் சேர்த்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தகண்ட் மாநில சமோலி மாவட்ட கலெக்டர் ஸ்வாதி, தனது மகன் அப்யுதயை, கோபேஷ்வர் நகரில் உள்ள, அரசு அங்கன்வாடி மையத்தில் சேர்த்துள்ளார்.

 

இதுகுறித்து கலெக்டர் ஸ்வாதி கூறியதாவது, அங்கன்வாடி மையத்தில், அனைத்து வசதிகளும் உள்ளன. மற்ற குழந்தைகளுடன் பேசி, பழகி, ஒன்றாக அமர்ந்து உணவருந்த முடியும். எதிர்காலத்தில், பொருளாதார ஏற்றத்தாழ்வின்றி, அனைவருடன் எளிதாக பழகுவதற்கு, இது உதவும். அதிகாரிகள் தங்கள் குழந்தைகளை சேர்ப்பதன் மூலம், அரசு அங்கன்வாடி மையத்தை பற்றிய மக்களின் அணுகு முறையில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்றார்.

click me!