சபரிமலை ஐயப்பன் கோவிலில் மீண்டும் 144 தடை உத்தரவு...!

Published : Nov 03, 2018, 12:59 PM IST
சபரிமலை ஐயப்பன் கோவிலில் மீண்டும் 144 தடை உத்தரவு...!

சுருக்கம்

சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று முதல் 6ம் தேதி வரை சித்திர ஆட்டவிசேஷம் திருவிழா நடைபெறுகிறது.

சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று முதல் 6ம் தேதி வரை சித்திர ஆட்டவிசேஷம் திருவிழா நடைபெறுகிறது

இதையொட்டி 5-ம் தேதி பிற்பகல் கோவில் நடை திறக்கப்பட்டு 6ம் தேதி மாலை பூஜைக்குப் பின்னர் அடைக்கப்படும். இந்த விழாவின் பாதுகாப்பு பணியில் சுமார் 1200 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். 

பம்பா, நிலக்கல் போன்ற பகுதிகளிலும் பக்தர்களின் பாதுகாப்புக்காக போலீசார் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர். பக்தர்கள் 5ம் தேதிக்குதான் பம்பாவில் இருந்து சன்னிதானம் நோக்கி செல்ல அனுமதிக்கப்படுவார்கள். 

பெண் பக்தர்களை கோவிலுக்குள் அனுமதிக்காமல் இந்து அமைப்புகள் போராட்டம் நடத்தி வருவதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதையொட்டி இன்று 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

PREV
click me!

Recommended Stories

மீண்டும் தாக்குதல் நடத்தினால் கடுமையான பதிலடி.. பாக். முப்படை தளபதி அசிம் முனீர் பம்மாத்து!
இண்டிகோ விமான சேவை சீராகிவிட்டது! 5% விமானங்களுக்கு செக் வைத்த மத்திய அரசு!