செல்போனில் பேசிக்கொண்டே வாகனம் ஓட்டுபவரா நீங்கள்... அப்போ உங்களுக்குத்தான் இந்த எச்சரிக்கை!

First Published Jul 8, 2018, 12:03 PM IST
Highlights
uttarakhand high court ordered to seize the cellphones


செல்போனில் பேசிக் கொண்டே வாகனம் ஓட்டுபவர்களிடம் இருந்து செல்போன்கள் பறிமுதல் செய்யப்படும் என்றும், அவை 24 மணி நேரத்துக்கு பிறகே உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என்று உத்தரகாண்ட் மாநில உயர்நீதிமன்றம் போக்குவரத்து துறைக்கு உத்தரவிட்டுள்ளது.

வாகனத்தில் செல்லும்போது செல்போனில் பேசிக் கொண்டே இயக்குவதால் அதிகளவில் விபத்துக்கள் நடைபெற்று வருகிறது. வாகனத்தில் செல்வோர் செல்போன் பயன்படுத்துவதை தவிர்க்கும் வகையில் புதிய கட்டுப்பாடு ஒன்றை உத்தரகாண்ட் மாநில உயர்நீதிமன்றம், போக்குவரத்து துறைக்கு உத்தரவிட்டுள்ளது. 

பேசிக் கொண்டே வாகனம் இயக்குபவர்களின் செல்போன்கறை பறிமுதல் செய்யவும், லைசென்ஸ் ரத்து செய்யவும் அம்மாநில உயர்நீதிமன்றம் உத்தரவிடிருந்தது. விதிகளை மீறுவோரிடம் இருந்து 5 ஆயிரம் ரூபாயை அபராதமாக வசூலிக்கவும் நீதிமன்றம் பரிந்துரை செய்திருந்தது. 

இந் நிலையில், உத்தரகண்ட் மாநிலத்தில் சென்ற வாரத்தில் மட்டும் 48 பேர் விபத்தில் உயிரிழந்துள்ளனர். செல்போனில் பேசியபடியே வாகனம் ஓட்டியதால் நிகழ்ந்த விபத்துகள் என்பது விசாரணையில் தெரிய வந்தது.

இதையடுத்து, அம்மாநில உயர்நீதிமன்றம், சாலை பாதுகாப்புக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் விபத்துக்களைத் தவிர்ப்பதற்கான வழிமுறைகள் குறித்து போக்குவரத்து துறை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். மொபைல் போனில் பேசியபடி வாகனம் ஓட்டுபவர்களின் மொபைல் போனை 24 மணி நேரத்துக்கு பறிமுதல் செய்ய வேண்டும். போதையில் வாகனம் ஓட்டுவோர், அதிக பாரம் ஏற்றுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தவு பிறப்பித்துள்ளது.

click me!