உ.பி தேர்தலில் போட்டியிடும் 300 கோடீஸ்வரர்கள்.... 168 கிரிமினல்கள்...!!!

Asianet News Tamil  
Published : Feb 05, 2017, 09:18 AM ISTUpdated : Sep 19, 2018, 03:03 AM IST
உ.பி தேர்தலில் போட்டியிடும் 300 கோடீஸ்வரர்கள்.... 168 கிரிமினல்கள்...!!!

சுருக்கம்

உ.பி.,யில் முதல்கட்டமாக நடக்கும் சட்டசபை தேர்தலில் 302 கோடீஸ்வரர்கள், கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்பட்ட 168 பேரும் போட்டியில் உள்ளது ஆய்வில் தெரியவந்துள்ளது.

ஆய்வு

உ.பி., சட்டசபைக்கு 7 கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. முதல் கட்டமாக வரும் 11-ம் தேர்தல் நடைபெற உள்ளது.

இந்த தேர்தலுக்கு வேட்பு மனு தாக்கல் முடிந்த நிலையில், வேட்பாளர்கள் பிரசாரத்தில் தீவிரமாக உள்ளனர். வேட்பாளர்கள் குறித்து ஜனநாயக சீர்திருத்தம் தொடர்பான தொண்டு நிறுவனம் ஆய்வு நடத்தியது.

கோடீஸ்வரர்கள்

இதில், முதல் கட்ட தேர்தலில் போட்டியிடும் 836 வேட்பாளர்களில் 302 கோடீஸ்வரர்கள் என தெரியவந்துள்ளது. பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் போட்டியிடும் 73 வேட்பாளர்களில் 66 பேர் கோடீஸ்வரர்கள் ஆவார்கள்.

இதேபோல் பா.ஜ., சார்பில் போட்டியிடும் 73 பேரில் 61 பேரும், சமாஜ்வாதி சார்பில் போட்டியிடும் 51 பேரில் 40 பேரும், காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் 24 பேரில் 18 பேரும், ராஷ்டிரிய லோக்தள் கட்சி சார்பில் போட்டியிடும் 57 பேரில் 41 பேரும், சுயேச்சையாக போட்டியிடும் 392 பேரில் 43 பேரும் தங்களுக்கு சொத்து ரூ. 1 கோடிக்கு மேல் உள்ளதாக தெரிவித்துள்ளனர். இவர்களின் சராசரி சொத்து ரூ.2.81 கோடியாக உள்ளது.

கிரிமினல் குற்றவாளிகள்

இதேபோல் 836 வேட்பாளர்களில் 168 பேர் தங்கள் மீது கிரிமினல் வழக்கு உள்ளதாக தெரிவித்துள்ளனர். இவர்களில் 143 பேர் மீது கடுமையான கிரிமினல் வழக்குகள் உள்ளது.

கொலை, கொலை முயற்சி, கடத்தல் பெண்களுக்கு எதிரான வன்முறை உள்ளிட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. வேட்பாளர்களில் 186 பேர் பேன் கார்டு பற்றிய விபரங்களை தாக்கல் செய்யவில்லை.

PREV
click me!

Recommended Stories

குடியரசு தின விழாவிற்கு பாரம்பரிய முறைப்படி சாரட் வண்டியில் வந்த குடியரசு தலைவர்
விண்வெளி நாயகனுக்கு வீர விருது.. சுபான்ஷு சுக்லாவுக்கு 'அசோக் சக்ரா' விருது.. மத்திய அரசு கெளரவம்!