3 மாதங்களுக்கு திருமணம் செய்ய தடை... அரசு அதிரடி அறிவிப்பு!

Published : Dec 02, 2018, 03:54 PM ISTUpdated : Dec 02, 2018, 03:55 PM IST
3 மாதங்களுக்கு திருமணம் செய்ய தடை... அரசு அதிரடி அறிவிப்பு!

சுருக்கம்

உத்தரபிரதேசத்தில் ஜனவரி முதல் மார்ச் மாதம் வரை 3 மாதங்களுக்கு திருமணம் செய்ய அதிரடியாக தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் வெளியிட்டுள்ளார். 

உத்தரபிரதேசத்தில் ஜனவரி முதல் மார்ச் மாதம் வரை 3 மாதங்களுக்கு திருமணம் செய்ய அதிரடியாக தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் வெளியிட்டுள்ளார். 

உத்தரபிரதேசத்தில் பாஜக தலைமையில் ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநில முதல்வராக உள்ள யோகி ஆதித்யநாத் அவ்வப்போது பல்வேறு சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்டு வருகிறார். சட்டம் ஒழுங்கு பிரச்னை, ஆக்சிஜன் பற்றாக்குறையால் குழந்தைகள் இறந்தது, கடவுள் அனுமன் தலித் என தொடர்ந்து சர்ச்சைகள் அரங்கேறி வருகின்றன. அந்த வகையில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தற்போது புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். 

உத்தரப்பிரதேசத்தில் வரும் ஜனவரி முதல் மார்ச் மாதம் வரை  கும்பமேளா, புத்த பூர்ணிமா உள்ளிட்ட விசே‌ஷ நாட்கள் வருகின்றன. 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பமேளா நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். அப்போது அங்கு ஏராளமான மக்கள் திரண்டு கங்கை உள்ளிட்ட நதிகளில் புனித நீராடுவது வழக்கம். உத்தரபிரதேசம் மட்டுமின்றி பிற மாநிலங்களை சேர்ந்த லட்சக்கணக்கானோர் அங்கு புனித நீராடி தரிசனம் செய்வார்கள்.

 இதனால் அங்கு மக்கள் கூட்டம் அதிகளவில் இருக்கும். திருமண மண்டபங்கள் மற்றும் ஓட்டல்களில் தங்கி செல்வார்கள். அப்போது திருமணங்கள் நடத்தினால் அவர்கள் தங்குவதற்கு பாதிப்பு ஏற்படும் என கருதி ஜனவரி முதல் மார்ச் வரை 3 மாதங்கள் உத்தரபிரதேசத்தில் திருமணம் நடத்த தடை விதித்து முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். 

எனவே மாவட்ட நிர்வாகங்கள் அனைத்து திருமண மண்டபங்கள் மற்றும் ஓட்டல்களின் உரிமையாளர்களுக்கு ஒரு சுற்றறிக்கையை அனுப்பியுள்ளது. அதில் மேற்கண்ட 3 மாதங்கள் திருமணம் நடத்தவோ, ஓட்டல்களில் தங்கவோ முன்பதிவு செய்திருந்தால் அதை ரத்து செய்யும்படி உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவு காரணமாக பல்வேறு திருமணங்கள் தள்ளி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

PREV
click me!

Recommended Stories

சட்டமானது 'வி.பி. ஜி ராம் ஜி' மசோதா! எதிர்ப்புகளை மீறி ஒப்புதல் அளித்த குடியரசுத் தலைவர்!
பள்ளிகளில் பகவத் கீதை வாசிப்பது கட்டாயம்..! முதல்வர் அதிரடி உத்தரவு..!