தமிழகத்தின் மிகச் சிறிய ஆனால் புகழ்பெற்ற கிராமமான உத்தரமேரூரில் உள்ள கல்வெட்டில் கிராம சபை தேர்தல் எவ்வாறு நடத்தப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. - பிரதமர் மோடி.
பிரதமர் நரேந்திர மோடி, கடந்த 2014 ஆம் ஆண்டு பிரதமராக பொறுப்பேற்றது முதல் மன் கி பாத் என்ற நிகழ்ச்சியின் மூலம் மாதம்தோறும் கடைசி ஞாயிற்று கிழமைகளில் காலை 11 மணிக்கு அகில இந்திய வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார்.
ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் மனதின் குரல் என்ற வானொலி நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களிடம் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றி வருகிறார். இந்தாண்டின் முதலாவது மனதின் குரல் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. அப்போது பேசிய அவர், ஒவ்வொரு ஆண்டும் 50 மில்லியன் டன் மின்சாதன கழிவுகள் தூக்கி வீசப்படுகிறது.
இதையும் படிங்க..DMK: நல்ல பீஸா அனுப்பு.. பெண் புரோக்கரிடம் ஆபாசமாக பேசிய திமுக நிர்வாகி - வைரல் ஆடியோ கிளப்பிய சர்ச்சை
தற்போது கணிசமான எண்ணிக்கையிலான பத்ம விருது பெற்றவர்கள் பழங்குடி சமூகத்தினர் என சுட்டிக்காட்டிய பிரதமர், பழங்குடி சமூகங்கள் எப்போதும் தங்கள் பாரம்பரியத்தை பாதுகாக்க ஆர்வமாக உள்ளதாக கூறினார். ஒடிசாவின் மகளிர் சுயஉதவி குழுவினர், தினையிலிருந்து பிஸ்கட், கேக் மற்றும் பிற உணவுப் பொருட்களைத் தயாரித்து அசத்தி வருகிறார்கள்.
தமிழகத்தின் மிகச் சிறிய ஆனால் புகழ்பெற்ற கிராமமான உத்தரமேரூரில் உள்ள கல்வெட்டில் கிராம சபை தேர்தல் எவ்வாறு நடத்தப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இது 1100-1200 ஆண்டுகளுக்கு முன்பே எழுதப்பட்ட கல்வெட்டு என்றும் சுட்டிக்காட்டிய பிரதமர் மோடி, உலகையே ஆச்சரியப்படுத்தக்கூடியது இது. இந்த கல்வெட்டு ஒரு சிறிய அரசியல் சாசனம்.
இதையும் படிங்க..கள ஆய்வில் முதலமைச்சர்.. தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் - முதல்வர் ஸ்டாலின் அடித்த அடுத்த சிக்சர் !!
12ம் நூற்றாண்டில் கர்நாடகாவில் கட்டப்பட்ட பசவேஸ்வரா ஆலயத்தில் அனுபவ மண்டபம் என ஒரு மண்டபம் உள்ளதையும், எவர் ஒருவரும் தனது அனுபவத்தை எவ்வித தயக்கமும் இன்றி கூறுவதற்காக இது கட்டப்பட்டது என்பதையும் தெரிவித்த நரேந்திர மோடி, இந்த மண்டபத்தில் ஏராளமான விவாதங்கள் நடத்தப்பட்டுள்ளன என்று கூறியுள்ளார்.
சிறுதானியங்களின் பயன்பாடு நாட்டில் அதிகரித்துள்ளதை பார்க்க முடிகிறது என தெரிவித்த பிரதமர் மோடி, சிறுதானியங்களை விளைவிக்கும் விவசாயிகள் இதனால் மிகப் பெரிய உற்சாகமடைந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். சமூக ஊடகம் ஒன்றில் காஷ்மீரை குறிப்பிட்டு எழுதிய ஒருவர், இந்த சொர்க்கத்தைவிட வேறு எது அழகாக இருக்க முடியும் என கேள்வி எழுப்பியதை சுட்டிக்காட்டினார் பிரதமர் நரேந்திர மோடி.
இதையும் படிங்க..Adani: 1.45 லட்சம் கோடி போச்சு.! பணக்காரர் பட்டியலில் பின்னடைவு - அடுத்த விஜய் மல்லையாவாக மாறுகிறாரா அதானி?