வர்த்தகக் கண்காட்சியில் கதர் பேஷன் ஷோ! உ.பி. அரசுக்கு மத்திய அமைச்சர் பாராட்டு!!

By SG Balan  |  First Published Sep 28, 2024, 11:08 AM IST

உத்தரப் பிரதேச மாநிலத்தில் நடைபெறும் சர்வதேச வர்த்தக கண்காட்சியில் பார்வையாளர்களைக் கவர்ந்த கதர் பேஷன் ஷோவுக்கு ஏற்பாடு செய்த மாநில அரசை மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் பாராட்டியுள்ளார். ஜவுளித்துறையில் உள்ள வேலைவாய்ப்புகளையும் அவர் எடுத்துரைத்தார்.


உத்தரப் பிரதேச மாநிலத்தில் நடைபெறும் சர்வதேச வர்த்தக கண்காட்சியில் பார்வையாளர்களைக் கவர்ந்த கதர் பேஷன் ஷோவுக்கு ஏற்பாடு செய்த மாநில அரசை மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் பாராட்டியுள்ளார். இத்துறையில் உள்ள வேலைவாய்ப்புகளையும் அவர் எடுத்துரைத்தார்.

உ.பி.யின் சர்வதேச வர்த்தகக் கண்காட்சி செப்டம்பர் 25 முதல் 29 வரை 5 நாட்கள் நடக்கிறது. மூன்றாவது நாளான வெள்ளிக்கிழமை காதி ஃபேஷன் ஷோவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. உ.பி.யின் கலாச்சாரத்துக்கு முக்கியத்துவம் அளித்து நடத்தப்பட்ட இந்தக் பேஷன் ஷோ மக்களை மிகவும் கவர்ந்தது.

Tap to resize

Latest Videos

undefined

ஆடம்பரமான கதர் புடவைகள் மற்றும் பிற ஆடைகளின் அணிவகுப்பு பார்வையாளர்களால் பெரிதும் பாராட்டப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மத்திய ஜவுளித்துறை அமைச்சர் கிரிராஜ் சிங் கலந்துகொண்டார். பேஷன் ஷோவை பார்வையிட்ட அமைச்சர், சர்வதேச வர்த்தக கண்காட்சியில் அமைக்கப்பட்டுள்ள பல்வேறு அரங்குகளை மத்திய ஜவுளித்துறை அமைச்சர் கிரிராஜ் சிங் பார்வையிட்டார். அரங்குகளின் அலங்காரம் மற்றும் காட்சிப்படுத்தப்பட்ட பல்வேறு பொருட்கள் பற்றிக் கேட்டறிந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

நிர்மலா சீதாராமன் மீது FIR பதிவு செய்ய பெங்களூரு நீதிமன்றம் உத்தரவு!

பின்னர் பேசிய அமைச்சர் கிரிராஜ் சிங், கதர் தொழிலை மேம்படுத்துவதற்கான மாநில அரசின் முயற்சிகளைப் பாராட்டினார். உ.பி.யின் முயற்சி பிரதமர் நரேந்திர மோடியின் 5F தொலைநோக்குப் பார்வையில் முக்கியப் பங்காற்றுகிறது என்று கூறினார். லக்னோ மற்றும் உன்னாவில் உள்ள PM மித்ரா பூங்காக்களின் வளர்ச்சி ஜவுளித்துறையின் வளர்ச்சிக்கு முக்கிய உந்துதலாக இருப்பதாக அவர் விவரித்தார்.

நொய்டா அப்பேரல் எக்ஸ்போர்ட் கிளஸ்டர் (என்ஏஇசி) திட்டத்தின் கீழ், யமுனா எக்ஸ்பிரஸ்வேயில் 10,000 கோடி ரூபாய் முதலீட்டில் கட்டப்பட்டு வரும் அப்பேரல் பூங்கா மூலம் அடுத்த 2 முதல் 3 ஆண்டுகளில் எல்லையற்ற வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என்றும் கிரிராஜ் சிங் தெரிவித்தார்.

பொருளாதாரம் மற்றும் சமூகத் துறைகளில் பெண்கள் அதிகாரம் பெறுவதற்கு இது ஒரு முக்கியமான படியாக இருக்கும் என்றும் கூறினார். "ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரத்திற்கான நிதி" என்ற தலைப்பில் ஒரு அமர்வு நிதி மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் சுரேஷ் குமார் கன்னா தலைமையில் நடைபெற்றது.

இந்த அமர்வில் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை அடைவதற்கான உ.பி. மாநில அரசின் உறுதிப்பாட்டை அவர் மீண்டும் வலியுறுத்தினார். மூலோபாய முதலீடுகள், பொது-தனியார் கூட்டாண்மை, நிதி உள்ளடக்கம் ஆகியவற்றின் முக்கிய பங்கை அவர் அடிக்கோடிட்டுக் காட்டினார். பின்னர், நடைபெற்ற கண்கவர் லேசர் ஷோ, நட்சத்திர இசைக் கலைஞர்களான பவன்தீப் மற்றும் அருணிதாவின் இசை நிகழ்ச்சி ஆகிய நிகழ்ச்சிகளுடன் 3ஆம் நாள் கண்காட்சி நிறைவு பெற்றது.

உ.பி. சர்வதேச வர்த்தக கண்காட்சியில் அமோக வரவேற்பை பெற்ற 'AI ராமாயண தரிசனம்'

click me!