UP Exit Poll 2022 : உபியில் மீண்டும் பாஜக.. அப்போ அகிலேஷ்,ராகுல்காந்தி..? கருத்துக் கணிப்பு முடிவுகள் !!

By Raghupati RFirst Published Mar 7, 2022, 7:09 PM IST
Highlights

அதிக சட்டமன்றத் தொகுதி மட்டுமின்றி அதிக மக்களவை தொகுதிகளைக் கொண்ட மாநிலம் என்பதினால் இந்த மாநில தேர்தல் தேசிய அளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2017-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பாஜக கூட்டணி 312 இடங்களிலும், சமாஜ்வாதி கட்சி 47 இடங்களிலும், பகுஜன் சமாஜ் கட்சி 17 இடங்களிலும், அப்னா தளம் (சோனேலால்) 9 இடங்களிலும், இந்தியத் தேசிய காங்கிரஸ் 7 இடங்களிலும் வெற்றி பெற்றிருந்தது. இந்த தேர்தலில், தேசிய ஜனநாயகக் கூட்டணியில், பாஜக 376 இடங்களிலும், நிசாத் கட்சி 15 இடங்களிலும், அப்னா தளம் (சோனேலால்) 12 இடங்களிலும் தேர்தலைச் சந்திக்கிறது. இந்த கூட்டணியில் முதல்வர் வேட்பாளராக யோகி ஆதித்யாநாத் அறிவிக்கப்பட்டுள்ளார். 

பகுஜன் சமாஜ் கட்சி 403 இடங்களிலும் தனித்துத் தேர்தலைச் சந்திக்கிறது. சமாஜ்வாதி கட்சி கூட்டணியில், சமாஜ்வாதி உட்பட மொத்தம் எட்டு கட்சிகள் ஒன்றிணைத்து இந்த தேர்தலைச் சந்திக்கிறது. இந்தியத் தேசிய காங்கிரஸ் கட்சி தனித்து களம் காண்கிறது. இடதுசாரிகள் தொடங்கி, ஆம் ஆத்மி கட்சி வரை பலரும் தேர்தலில் போட்டியிடுகிறார்கள்.

Latest Videos

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளது. அதன்படி, உத்தரப்பிரதேசம் மாநில தேர்தல்  வெற்றி கணிப்பு நிலவரம் இதோ, 

NewsX கருத்துக்கணிப்பு முடிவுகள் :

பாஜக கூட்டணி - 225

சமாஜ்வாதி கூட்டணி - 148

காங்கிரஸ் - 6

பகுஜன் சமாஜ்வாதி - 24

மற்றவை - 0

NewsX கருத்துகணிப்பின் படி உத்திரபிரதேசம் சட்டமன்ற தேர்தலில் பாஜக மீண்டும் ஆட்சி அமைக்க வாய்ப்பு இருக்கிறது.

 

என்.டி.டி.வி  கருத்துக்கணிப்பு முடிவுகள் :

பா.ஜ.க கூட்டணி - 240 இடங்கள்

சமாஜ்வாடி கூட்டணி - 143 இடங்கள்

பகுஜன் சமாஜ் - 14 இடங்கள்

காங்கிரஸ் - 5 இடங்கள்

 

ரிபப்ளிக் கருத்துக்கணிப்பு முடிவுகள் :

பாஜக கூட்டணி - 262 முதல் 277

சமாஜ்வாடி கூட்டணி - 119 முதல்134

பகுஜன் சமாஜ் - 7 முதல் 15

காங்கிரஸ் - 3 முதல் 8

மற்றவர்கள் - 1 முதல் 3

click me!