ஆன்மீக பூமியாக கருதப்படும் இந்தியாவில் லட்சக்கணக்கான கோயில்கள் உள்ளன. இவற்றில் நம்ப முடியாத ஆச்சர்யங்களை கொண்ட பல கோயில்களும் இந்தியாவில் உள்ளன. அப்படிப்பட்ட தீர்க்கப்படாத மர்மங்கள் நிறைந்த கோயில்கள் குறித்து தற்போது பார்க்கலாம்.
மெஹந்திபூர் பாலாஜி கோவில்: தௌசா, ராஜஸ்தான்
ஒரு கோயிலில் ஆண்களும் பெண்களும் உரத்த குரலில் அலறும் சத்தம் கேட்பதை கற்பனை செய்தாலே கொஞ்சம் பயமாக தான் இருக்கும். ஆனால் ராஜஸ்தானில் உள்ள மெஹந்திபூர் பாலாஜியில் அதை பார்க்கலாம். இந்தியாவின் நன்கு அறியப்பட்ட மர்மமான கோயில்களில் ஒன்றாகும், மேலும் இது ராஜஸ்தானில் உள்ள ஒரு அசாதாரண கோயிலாக உள்ளது. எதிர்மறை சக்தியால் பாதிக்கப்பட்ட நபர்களை விடுவிக்க பலர் இங்கு வருகின்றனர். சூனியம் அல்லது பேய் பிசாசு போன்ற தீய சக்தியால் பாதிக்கப்பட்டவர்களை குணப்படுத்த ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான மக்கள் மெஹந்திபூர் பாலாஜி கோயிலுக்கு வருகிறார்கள்.
undefined
வினோதமான சடங்குகளால் இது இந்தியாவில் ஒரு வித்தியாசமான கோயிலாக உள்ளது. இந்த கோயிலுக்குள் யார், எதை கொடுத்தாலும் சாப்பிடக்கூடாது. மேலும், கோயில் வளாகத்தை விட்டு வெளியே செல்லும் போது திரும்பிப் பார்க்க வேண்டாம். கோயிலுக்குள் எதையும் தொட கூடாது. மெஹந்திபூர் பாலாஜி கோவிலில் நீங்கள் காணும் உடைமைகளை புகைப்படம் எடுக்க கூடாது.
காமாக்யா தேவி கோவில்: கவுகாத்தி, அசாம்
பெண்மை மற்றும் மாதவிடாயை கொண்டாடும் கோயில் ஒன்று இந்தியாவில் உள்ளது. ஆம். அசாம் மாநிலம் கவுகாத்தியில் உள்ள காமாக்யா தேவி கோயில் இந்தியாவில் உள்ள ஒரு மர்மமான கோயிலாகும். நிலாச்சல் மலையின் உச்சியில் அமைந்துள்ள இக்கோயில் நூற்றாண்டுகள் பழமையானது. இந்தியாவில் உள்ள புகழ்பெற்ற 51 சக்தி பீடங்களில் ஒன்றாகும்.
கோவில் வளாகத்திற்குள் நுழையும் போது, பக்தர்கள் வணங்கும் கல் வடிவ பெண்ணுறுப்பு மட்டும் இங்கு உள்ளது. அதை தவிர வேறு எந்த சிலையும் அங்கு இருக்காது. பக்தர்கள் அதை சிவப்பு நிற புடவையால் மூடப்பட்டிருக்கும். ஜூன் மாதத்தில் அந்த கோயிலில் உள்ள அம்மனுக்கு மாதவிடாய் ஏற்படும் என்றும், அதனால் ஏற்படும் இரத்தம் கசிவால், நிலத்தடி நீர் சிவப்பு நிறமாக இருக்கும். கோவில் ஆண்டுதோறும் ஜூன் வரை மூடப்பட்டிருக்கும்.
அம்மன் கருவறையை மூன்று நாட்கள் கொண்டாடும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் மழைக்காலத்தில் அம்புபாச்சி திருவிழா கொண்டாடப்படுகிறது. அந்த நேரத்தில், கோவில் மூடப்பட்டு நான்காம் நாள் மீண்டும் திறக்கப்படுகிறது. இங்கு செல்லும் பொது மக்களுக்கு நுழைவு கட்டணம் இல்லை. இருப்பினும், நாடாளுமன்ற மற்றும் பாதுகாப்புப் படைகள் ஒரு நபருக்கு 10 ரூபாய் (தோராயமாக) செலுத்த வேண்டும். சிறப்பு தரிசனத்திற்கு 101 ரூபாய் மற்றும் நேரடி தரிசனத்திற்கு 501 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும்.
பத்மநாபசுவாமி கோயில்: திருவனந்தபுரம், கேரளா
திருவனந்தபுரம் கேரளாவின் தலைநகரம் ஆகும், இங்கு பத்மநாபசுவாமி கோவில் உள்ளது. பத்மநாபசுவாமி கோவிலுக்குள் நுழைவதற்கு முன்பு செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவைகள் ஏராளம். கோவிலுக்குள் நவீன ஆடை அணிந்து வருவோருக்கு அனுமதி இல்லை. ஆண்கள் வேட்டி அணிய வேண்டும், பெண்கள் ‘சேலை’ அணிந்தால் அனுமதிக்கப்படுவார்கள்.
பத்மநாபசுவாமி கோயில் தற்போது திருவிதாங்கூர் அரச குடும்பத்தின் தலைமையில் இயங்கி வருகிறது. எந்த வகையான மின்னணு உபகரணங்களுக்கும் அனுமதி இல்லை. பாதாள அறைகளுக்குள் இருக்கும் செல்வத்தைப் பாதுகாக்க அரசு அதிகாரிகள் Z- பாதுகாப்பை வழங்குகிறார்கள்.
இந்தியாவில் உள்ள இந்த மர்மமான கோவில், தரிசிக்கும் அனைத்து பக்தர்களின் விருப்பங்களையும் நிறைவேற்றும் சக்தி வாய்ந்தது. பத்மநாப கோயில் கிபி 8ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது என வரலாற்று நிபுணர்கள் கண்டறிந்துள்ளனர். இந்தியாவில் உள்ள இந்த மர்மமான ஆலயத்தின் வடிவமைப்பிற்கு சேரர்களின் கட்டிடக்கலை உத்வேகம் அளிக்கிறது. இது விஷ்ணுவின் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகும்.
வெங்கடாஜலபதி கோயில் திருமலை, ஆந்திரப் பிரதேசம்
ஆந்திரப் பிரதேசத்தின் திருப்பதி பகுதியில் உள்ள இந்த மர்மக் கோவிலின் அற்புதங்களை வார்த்தைகளால் விளக்க முடியாது. அதனால்தான் தினமும் லட்சக்கணக்கான பக்தர்களை பெருமாளை தரிசிக்க வருகின்றனர்.
திருப்பதியில் உள்ள இந்த மர்ம கோவிலுக்கு சர்வதேச சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டுகின்றனர். கருவறையில் உள்ள பெருமாள் உண்மையான தலை முடியுடன் காணப்படுகிறார். பெருமாள் சில்லை, பலமுறை வியர்வையுடன் காணப்பட்டது. மேலும், பூசாரிகள் தொடர்ந்து உலர்த்திய போதிலும், சிலையின் பின்புறம் ஈரப்பதத்துடன் காணப்படும்.
வெங்கடேஸ்வரா கோவிலின் மிகவும் புதிரான உண்மை என்னவென்றால், கருவறையின் பின்னால் உள்ள சுவற்றில் பக்தர்கள் தங்கள் காதுகளை தெய்வத்தின் பின்புறத்தில் கவனமாக கேட்டால், கடல் அலை ஓசையை கேட்க முடியும். திருமலை வெங்கடேஸ்வரா கோவில் இந்தியாவின் மிகவும் மதிப்புமிக்க மற்றும் பணக்கார கோவில்களில் ஒன்றாகும்
மீனாட்சி அம்மன் கோயில்:
தமிழ்நாட்டில் உள்ள பிரபலமான கோயில்களில் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் ஒன்றாகும். மதுரையின் மையப்பகுதியில் 14 ஏக்கர் பரப்பளவைக் கொண்ட பிரமாண்டமான நிலப்பரப்பில், மீனாட்சி அம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்தியாவின் மிகவும் பேசப்படும் மர்மமான கோயில்களில் ஒன்றாக கருதப்படும் இந்த கோயில் வரலாற்று மற்றும் புராண முக்கியத்துவம் வாய்ந்தது.
பார்வதி தேவியை (மீனாட்சி) திருமணம் செய்ய சிவபெருமான் சுந்தரேஸ்வரராக (அழகராக) மாறிய இடம் தான் மீனாட்சி அம்மன் கோயில் என்று கூறப்படுகிறது. இந்த கோயில் வளாகத்தில் சுமார் 33,000 சிற்பங்கள் உள்ளன, அவை 3000 ஆண்டுகளுள் பழமையானவை என்று கருதப்படுகிறது. சிறந்த சிற்பக்கலைக்கு சிறந்த எடுத்துக்காட்டாக மீனாட்சி அம்மன் கோயில் உள்ளது. சுமார் 4000 தூண்கள் இங்கு உள்ள, ஒவ்வொன்றும் ஒரு பாறையால் செதுக்கப்படது என்பது தான் சிறப்பு.
கோயில் வளாகத்தின் உள்ளே யானைகளின் தலைகளுடன் கூடிய சிங்கம் போன்ற புராண மிருகங்கள் உட்பட கடவுள் மற்றும் தெய்வங்களின் பிரம்மாண்டமான உருவங்கள் உள்ளன. இக்கோயில் சிவன் மற்றும் பார்வதி தேவிக்காக அர்ப்பணிக்கப்பட்டாலும், உள்ளூர் மக்கள் எப்போதும் மீனாட்சி அம்மனை முதலில் வணங்குவார்கள். தூய்மையான இதயம் கொண்ட அனைவரின் பிரார்த்தனைகளும் இந்த கோயிலில் நிறைவேறும் என்பது உலகெங்கிலும் உள்ள பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.
வீரபத்ரர் கோயில்: லெபக்ஷி, ஆந்திரப் பிரதேசம்
ஆந்திரப் பிரதேசத்தின் லெபக்ஷி மாவட்டத்தில் உள்ள வீரபத்ரா கோயில் இந்தியாவில் உள்ள ஒரு மர்மமான கோயிலாகும். அதன் வரலாறு 16 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது, அதன் கட்டிடக்கலை விஜயநகர் பாணியை சித்தரிக்கிறது. அதன் ஒரு தூண் மேற்கூரையில் இருந்து தொங்குவதால், பல சுற்றுலாப் பயணிகளுக்கு இது புதிரானதாகக் காணப்படுகிறது, இதனால், வீரபத்ரா கோயில் ஆந்திரப் பிரதேசத்தில் மட்டுமல்ல, நாடு முழுவதும் பிரபலமான கோயிலாக மாறியுள்ளது.
தூணுக்கும் தரைக்கும் இடையே உள்ள இடைவெளியை சோதிக்க, ஒரு துணியையும் வைக்கலாம். நீங்கள் கோவில் வளாகத்திற்குள் நுழையும் போது, கலாச்சார மற்றும் பழங்கால பொறியியல் அதிசயங்களை பார்க்கலாம். கோயில் சுவர்களில் தூண்கள் உட்பட பல்வேறு கடவுள் மற்றும் தெய்வங்களின் தெய்வங்கள் செதுக்கப்பட்டிருக்கும். பழங்கால இந்திய கலாச்சாரம் மற்றும் மரபுகளை வியக்க வைக்கும் வகையில் மேற்கூரை ஓவியங்கள் இடம்பெற்றுள்ளது.
கைலாச கோவில்: எல்லோரா குகைகள், மகாராஷ்டிரா
கைலாசா கோயில் 16 ஆம் நூற்றாண்டு எல்லோரா குகைகளில் பாறைகளால் வெட்டப்பட்ட மிகப்பெரிய இந்துக் கோயிலாகும். முன்னெப்போதும் இல்லாத வகையில் இந்திய தொன்மங்கள் பற்றிய உங்கள் அறிவை மேம்படுத்த இந்த கோயில் உதவும் . கைலாச குகைக்கோயில் ஒரே பாறையில் செதுக்கப்பட்டது.
கைலாச குகைக் கோவிலின் உள்ளே, ராமாயணத்தின் விளக்கம் பொறிக்கப்பட்டுள்ளது. இந்த மூன்று-அடுக்கு உயரமான கோயில் அமைப்பில் சிக்கலான சிற்ப வேலைப்பாடுகள் உள்ளன. எனினும் முகலாய மன்னர் ஔரங்கசீப்பின் ஆட்சியில் அவர் குகைகள் அழிக்க உத்தரவிட்டார், ஆனால் கைலாச குகை கோயிலுக்கு எதுவும் நடக்கவில்லை.
இந்த கோயிலில் 30 மில்லியன் சமஸ்கிருத சிற்பங்கள் உள்ளதாகவும், அவற்றின் அர்த்தத்தை புரிந்து கொள்ள முடியவில்லை என்றும் தொல்பொருள் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.. இந்தக் காலத்தில் எந்த நபரிடமும் அவ்வளவு நேர்த்தியான கைவினைத்திறன் இல்லை, எனவே இது இந்தியாவில் ஒரு மர்மமான கோயில் என்று பலர் நம்புகிறார்கள்.