"குறைந்தபட்ச மாத ஊதியம் அதிகரிக்கிறது" பணியாளர்களுக்கு தித்திப்பான செய்தி சொன்ன மத்திய அரசு!

Ansgar R |  
Published : Sep 26, 2024, 08:37 PM IST
"குறைந்தபட்ச மாத ஊதியம் அதிகரிக்கிறது" பணியாளர்களுக்கு தித்திப்பான செய்தி சொன்ன மத்திய அரசு!

சுருக்கம்

Centre Increase Minimum Wages : அமைப்புசாரா துறையில் பணியேற்றும் பணியாளர்களுக்கான குறைந்தபட்ச ஊதியத்தை மாதம் ரூ.26,910 வரை மத்திய அரசு உயர்த்தியுள்ளது.

இந்தியாவில் தொழிலாளர்களுக்கு, குறிப்பாக அமைப்புசாரா துறையில் பணியாற்றும் பணியாளர்களுக்கு ஆதரவளிக்கும் ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக, மத்திய அரசு மாறக்கூடிய அகவிலைப்படியை (VDA) திருத்தி அமைத்துள்ளது. இதன் விளைவாக குறைந்தபட்ச ஊதிய விகிதங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று வியாழன் அன்று தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையின் கூறியுள்ளபடி, அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவை சமாளிக்க தொழிலாளர்களுக்கு உதவும் வகையில் தான் இந்த சம்பள உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும் இந்த மாற்றம் அடுத்த மதமே அமலாகும் என்றும் அறிவித்துள்ளது. 

UPITS 2024ல் YEIDA: ஃபின்டெக் முதல் செமிகண்டக்டர் வரை: சர்வதேச வர்த்தக கண்காட்சியில் ஸ்வாரசியம்

புதிய ஊதிய விகிதங்கள் அக்டோபர் 1, 2024 முதல் அமலுக்கும்

திருத்தப்பட்ட ஊதிய விகிதங்கள் வரும் அக்டோபர் 1, 2024 முதல் நடைமுறைக்கு வரும். மேலும் கடைசியாக ஏப்ரல் 2024ல் இது திருத்தம் செய்யப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. கட்டிடம் கட்டுதல், பாரம் ஏற்றுதல் மற்றும் இறக்குதல், கண்காணிப்பு மற்றும் வார்டு சார்ந்த பணிகள், சுத்தம் செய்தல், வீட்டு பராமரிப்பு, சுரங்கம் மற்றும் விவசாயம் உட்பட பல்வேறு துறைகளில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் இந்த புதிய விகிதங்களால் பயனடைவார்கள்.

திறமையற்ற தொழிலாளர்கள் (தொழில் சார்ந்த திறன் இல்லாதவர்கள்), ஒரு நாளைக்கு ரூ 783 (மாதம் ரூ 20,358) சம்பளம் பெறுவார்கள், செமி ஸ்கில்டு தொழிலாளர்கள், ஒரு நாளைக்கு ரூ 868 (மாதம் ரூ 22,568) சம்பளம் பெறுவார்கள். திறமையான தொழிலாளர்கள் மற்றும் எழுத்தர் பதவியில் உள்ளவர்கள், ஒரு நாளைக்கு ரூ 954 (மாதம் ரூ 24,804) சம்பளம் பெறுவார்கள்.

மிகவும் திறமையான தொழிலாளர்கள் மற்றும் ஆயுதங்களுடன் கண்காணிப்பு மற்றும் வார்டு பணியில் உள்ளவர்கள், ஒரு நாளைக்கு ரூ 1,035 (மாதம் ரூ 26,910) வரை சம்பளம் பெறுவார்கள். தொழில்துறை தொழிலாளர்களுக்கான நுகர்வோர் விலைக் குறியீட்டின் ஆறு மாத சராசரி அதிகரிப்பின் அடிப்படையில், ஏப்ரல் 1 மற்றும் அக்டோபர் 1 முதல் நடைமுறைக்கு வரும் VDA ஐ ஆண்டுக்கு இரண்டு முறை மத்திய அரசு திருத்துகிறது. துறைகள், பிரிவுகள் மற்றும் பகுதிகள் வாரியாக குறைந்தபட்ச ஊதிய விகிதங்கள் பற்றிய விரிவான தகவல்கள் தலைமை தொழிலாளர் ஆணையர் (மத்திய) இணையதளத்தில் clc.gov.inல் சரிப்பார்களாம்.

உத்தரபிரதேசத்தில் முதலீடு செய்ய வியட்நாமுக்கு முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அழைப்பு

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

சபரிமலை சன்னிதானத்திற்கு அருகில் திடீர் தீ விபத்து!
ஹமாஸ் நமக்கு பொது எதிரி.. உடனே இதைச் செய்யுங்க.. இந்தியாவுக்கு இஸ்ரேல் வார்னிங்!