மத்திய உள்துறை அமைச்சகம் இன்று குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) தொடர்பான விதிகளை அறிவிக்க வாய்ப்புள்ளது எனத் தகவல் வெளியாகியுள்ளது.
மத்திய உள்துறை அமைச்சகம் இன்று குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) தொடர்பான விதிகளை அறிவிக்க வாய்ப்புள்ளது எனத் தகவல் வெளியாகியுள்ளது. சர்ச்சைக்குரிய இந்தச் சட்டத்தை அமல்படுத்துவது தொடர்பான அறிவிப்பை வெளியிடலாம் என்று கூறப்படுகிறது.
வரும் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக குடியுரிமை திருத்தச் சட்டம் (CAA) அமல்படுத்தப்படும் என்று சஉள்துறை அமைச்சர் அமித் ஷா வலியுறுத்திய ஒரு மாத காலத்திற்குள் இந்தத் தகவல் வந்துள்ளது.
உள்துறை அமைச்சர் "குடியுரிமை திருத்தச் சட்டம் கண்டிப்பாக அறிவிக்கப்படும். தேர்தலுக்கு முன்பே அமலுக்கு வரும். இதைப் பற்றி யாரும் சந்தேகப்பட வேண்டாம்" என்று டெல்லியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் அமித் ஷா கூறினார்.
எங்க போனாலும் மக்கள் எங்களைத் தான் பாராட்டுராங்க! குஷியாக போட்டோ போட்ட பிரதமர் மோடி!
பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் போன்ற முஸ்லீம் பெரும்பான்மை நாடுகளிலிருந்து வெளியேறிய முஸ்லீம் அல்லாத அகதிகளுக்கு குடியுரிமை வழங்குவதற்கு வழிவகுக்கும் இந்தச் சட்டம் டிசம்பர் 2019 இல் நாடாளுமன்றத்த்தில் நிறைவேற்றப்பட்டது.
இந்தியா முழுவதும் லட்சக்கணக்கான மக்கள் தெருக்களில் இறங்கி இந்தச் சட்டத்திற்கு எதிராகப் போராட்டங்களில் ஈடுபட்டனர். தலைநகர் டெல்லியின் ஷாஹீன் பாக்கில் ஆயிரக்கணக்கான மக்கள் ஒரு மாத கால போராட்டத்தை நடத்தினர். உலகம் முழுவதும் கவனத்தை ஈர்த்த இந்தப் போராட்டத்திற்குப் பின் இச்சட்டம் அமல்படுத்தப்படாமல் நிறுத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேசத்தில் துன்புறுத்தலுக்கு ஆளாகி இந்தியாவுக்கு வருபவர்களுக்கு குடியுரிமை வழங்குவதற்காக மட்டுமே இந்தச் சட்டம் உருவாக்கப்படுகிறது என்றும் இந்தியாவில் உள்ள முஸ்லிம் சகோதரர்கள் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக தவறாக வழிநடத்தப்படுகிறார்கள் என்றும் கடந்த மாதம் உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறினார். இந்தச் சட்டம் யாருடைய குடியுரிமையையும் பறிப்பதற்காகனது அல்ல என்றும் விளக்கினார்.
மகளுக்கு வாரி வழங்கும் அம்பானி! ஈஷா அம்பானியின் மாதச் சம்பளம் எவ்வளவு தெரியுமா?