ஒரே மொழியாக இந்தி இருக்க வேண்டும் என நான் கூறவில்லை... ஜகா வாங்கிய அமித் ஷா..!

By vinoth kumarFirst Published Sep 18, 2019, 6:10 PM IST
Highlights

இ நான் பேசியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டது. இந்தியாவின் ஒரே மொழியாக இந்தி இருக்க வேண்டும் என நான் கூறவில்லை என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா விளக்கமளித்துள்ளார். நானும் இந்தி பேசாத மாநிலத்தில் இருந்தே வந்திருக்கிறேன். 2-வது மொழி ஒன்றை கற்கவேண்டும் என்றால் இந்தியை கற்றால் நன்றாக இருக்கும் என்றே கூறினேன். 

இந்தியாவின் ஒரே மொழியாக இந்தி இருக்க வேண்டும் என நான் கூறவில்லை. நான் பேசியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டது என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா விளக்கமளித்துள்ளார்.

இந்தி தினத்தை முன்னிட்டு மத்திய உள்துறை அமைச்சரும், பாஜக தேசியத் தலைவருமான அமித்ஷா தனது டுவிட்டரில், இந்தியாவில் பல மொழிகள் உள்ளன. ஒவ்வொரு மொழியும் தனிச்சிறப்பு வாய்ந்தவை. ஆனால், உலகளவில் இந்தியாவின் அடையாளமாக ஒரு பொதுமொழி இருக்க வேண்டியது அவசியம். தற்போது நாட்டை ஒன்றிணைக்கும் திறன் வாய்ந்த மொழி ஒன்று உண்டென்றால், அது நாடு முழுவதும் பரவலாக பேசப்படும் இந்தி மொழிதான். மகாத்மா காந்தி, சர்தார் படேல் ஆகியோரின் கனவை நிறைவேற்ற இந்திய மக்கள் தங்கள் தாய் மொழியையும், இந்தியையும் முன்னேற்ற வேண்டும் என நான் விரும்புகிறேன்' என்று தெரிவித்து இருந்தார்.

இவரின் இந்த கருத்து தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. அவரது இந்த கருத்துக்கு மு.க.ஸ்டாலின், வைகோ, கமல்ஹாசன், அதிமுக உள்ளிட்ட கட்சிகள் கடும் கண்டனத்தையும், எதிர்ப்பையும் தெரிவித்தனர். பாஜகவைச் சேர்ந்த முதல்வர் எடியூரப்பாவும் கன்னட மொழியும் கன்னட கலாச்சாரமும் தான் எங்களுக்கு முக்கியம் என்றும் கன்னட மொழிக்கு தரப்படும் முக்கியத்துவத்தில் ஒருபோதும் சமரசம் கிடையாது என்றும் அதிரடி காட்டினார். 

இந்நிலையில், நான் பேசியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டது. இந்தியாவின் ஒரே மொழியாக இந்தி இருக்க வேண்டும் என நான் கூறவில்லை என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா விளக்கமளித்துள்ளார். நானும் இந்தி பேசாத மாநிலத்தில் இருந்தே வந்திருக்கிறேன். 2-வது மொழி ஒன்றை கற்கவேண்டும் என்றால் இந்தியை கற்றால் நன்றாக இருக்கும் என்றே கூறினேன். அனைத்து மாநில மொழிகளும் வலுப்பெற வேண்டும் என்பதே எனது விருப்பம் என்றார். இந்தி குறித்த கருத்து தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் எதிர்ப்பு எழுந்த நிலையில் அதிரடி விளக்கம் அளித்துள்ளார்.  

click me!