இதுகூட கொரோனா அறிகுறியா இருக்கலாம்.. அசால்ட்டா இருக்காதீங்க..! மத்திய சுகாதாரத்துறை எச்சரிக்கை

By karthikeyan VFirst Published Jun 13, 2020, 4:54 PM IST
Highlights

வாசனை மற்றும் சுவை தெரியாதது கூட கொரோனா அறிகுறியாக இருக்கலாம் என்று மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 
 

சீனாவின் வூஹான் நகரில் உருவான கொரோனா வைரஸ், உலகம் முழுதும் காட்டுத்தீயாய் பரவி, 4 லட்சத்து 27 ஆயிரத்துக்கும் அதிகமான உயிர்களை காவு வாங்கியுள்ளது. உலகளவில் 77 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

இந்தியாவில் கொரோனா பாதிப்பு தினமும் புதிய உச்சத்தை எட்டிவருகிறது. இந்தியாவில் பாதிப்பு எண்ணிக்கை 3 லட்சத்தை கடந்துவிட்ட நிலையில், உலகளவில் கொரோனா பாதிப்பில் நான்காமிடத்தில் உள்ளது இந்தியா. 

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தனிமை வார்டுகளில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவரும் அதேவேளையில், கொரோனா குறித்த விழிப்புணர்வுகளும் ஏற்படுத்தப்பட்டுவருகின்றன. கொரோனா அறிகுறிகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளன. 

இருமல், காய்ச்சல், தொண்டைவலி, மூச்சுத்திணறல், வறட்டு இருமல், தொண்டை வறட்சி, சோர்வு ஆகியவை கொரோனா அறிகுறிகள் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ள நிலையில். வாசனை மற்றும் சுவை தெரியாததும் கொரோனா அறிகுறிகளாக இருக்கலாம் என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. எனவே வாசனை, சுவை தெரியவில்லை எனில் அலட்சியமாக இருக்க வேண்டாம்.

click me!