பெரும் எதிர்பார்ப்பில் மத்திய பட்ஜெட் 2021... இந்த முறை சுகாதாரத் துறைக்கு அதிக நிதியை ஒதுக்க திட்டம்?

By vinoth kumar  |  First Published Jan 28, 2021, 1:30 PM IST

கொரோனாவால் இந்திய பொருளாதாரமே ஸ்தம்பித்துப் போனதால் இந்த முறை சுகாதாரத் துறைக்கு அதிக நிதியை ஒதுக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. 


கொரோனாவால் இந்திய பொருளாதாரமே ஸ்தம்பித்துப் போனதால் இந்த முறை சுகாதாரத் துறைக்கு அதிக நிதியை ஒதுக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. 

கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக இந்திய பொருளாதாரமே அதளபாதாளத்தில் தள்ளப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில், 'மத்திய பட்ஜெட் 2021' வருகிற பிப்ரவரி 1-ம் தேதி நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ளார். மத்திய பட்ஜெட்டில் ஒவ்வொரு வருடமும் துறை சார்ந்த நிதி ஒதுக்கீடுகள் இருக்கும். ஒவ்வோர் ஆண்டிலும் பல்வேறு துறைகளுக்கான எதிர்பார்ப்புகள் அதிகம் இருந்தாலும், இந்த ஆண்டு சுகாதாரத் துறைக்கான ஒதுக்கீடு அதிகம் வேண்டும் என்பதே பலரின் எதிர்பார்ப்பாக உள்ளது. 

Latest Videos

undefined

ஏனெனில் இன்றைய நெருக்கடியான காலகட்டத்திலும் கொரோனாவை எதிர்த்துப் போராடிவரும் சுகாதாரத் துறையினர், பல சவால்களை எதிர்கொண்டு வருகின்றனர். உள்கட்டமைப்பு வசதிகள் அதிகம் தேவைப்படுவதால், அதை மேம்படுத்தும் நோக்கில் அதிக நிதியை சுகாதாரத் துறைக்கு ஒதுக்கவேண்டும். ஏனெனில், இந்தியா தனது ஜி.டி.பி விகிதத்தில் 3% அளவுக்கு மட்டுமே சுகாதாரத் துறைக்குச் செலவிடுகிறது. இதே சர்வதேச நாடுகள் பல தங்களது ஜி.டி.பி விகிதத்தில் 8% அளவுக்கு சுகாதாரத் துறைக்காகச் செலவு செய்யப்படுகின்றது. இந்நிலையில், வர உள்ள மத்திய பட்ஜெட் 2021-ல் அரசு சுகாதாரத் துறைக்கு முக்கியத்துவம் அளிக்கவேண்டியது மிக அவசியம் என்கின்றனர்.

இந்நிலையில், கடந்த ஆண்டு பட்ஜெட்டில் சுகாதாரத் துறைக்கு மொத்த ஒதுக்கீடு 67,484 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருந்தது. தற்போது கொரோனா நோய்த் தொற்றுக்கான தடுப்பூசி செலவினங்களை அரசு ஏற்றுள்ளதால், அதற்கான நிதி ஒதுக்கீடும் சுகாதாரத்துறை சார்ந்தே இருக்கும். இதற்கான செலவே பெரும் பங்கு இருக்கும்போது, உள்கட்டமைப்பு போன்ற தேவைகளுக்கான ஒதுக்கீடு கடந்த ஆண்டைவிட இன்னும் கூடுதலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

click me!